பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

சொற்களும் ஆங்கிலக் கலைச் சொற்களின் ஒலிபெயர்ப்பும் அதிக அளவில் கலந்து வெளிவந்தன 1985ஆம் ஆண்டிற்குப் பின்னர், நல்ல தமிழை, தூய தமிழைப் பயன்படுத்த வேண்டும் எனும் வேட்கை அழுத்தமாக எழுந்தது. புதிய கலைச்சொற் களை தூய தமிழில் உருவாக்கும் முயற்சிகளும் முனைப்பு - ன் மேற்கொள்ளப்பட்டன. தமிழில் அறிவியலைக் கூற முற்பட்ட அதே சமயத்தில், அறிவியல் கலைச் சொற்களைப் பற்றிய சிந்தனையும், இம் முயற்சியில் ஈடுபட்டோரிடையே இருந்து வந்தது.

நாடு விடுதலை பெற்ற பின்னர், எல்லாத் துறைகளின் வளர்ச்சிப் போக்கிலும் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டது போன்றே, அறிவியல் தமிழ் ஆக்க முயற்சியிலும் தமிழில் அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொற்களை உருவாக்கு வதிலும் ஆக்கமான முயற்சிகள் அரசுத்தரப்பிலும், நூலாசிரியர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அறிவியல் வளாச்சியில் இதழ்களின் பங்கு

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் கணிசமான பங்கு உண்டு. 1881ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகையின் பெயரே "தமிழ் மேகசின்' என்பது தான் இதில்தான் பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன் முதலில் வெளிவரத் தொடங்கின. இதற்குப் பிறகு நீண்ட காலம் வேறு தமிழ் இதழ்கள் ஏதும் அறிவியல் செய்திகளைக் கூறும் வகையில் அமையவில்லை.

பத்திரிகைத் துறை வரலாற்றைப் பார்க்கும்போது சுமார் 40 ஆண்டுக்காலம் வரை அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் வெளியிடும் இதழ்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் 1870இல் "அகத்திய வர்த்த மானி' என்ற பெயரில் வைத்திய முறைகளை விவரிக்கும் கட்டுரைகளுடன் தமிழ் இதழ் ஒன்று வெளிவந்தது. அடுத்து 1887இல் 'சுகசீவனி' என்ற பெயரில் வைத்திய மாத இத ழொன்று பெங்களுர் நகரிலிருந்து வெளிவந்தது. இதில் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் ஆங்கில மொழி கட்டுரைகள் இடம் பெற்று வந்தன. தொடர்ந்து 1891ஆம் ஆண்டில் "சுகாதார போதினி' என்ற பெயரில் மருத்துவம் பற்றி, குறிப் பாகப் பொதுச் சுகாதாரம் பற்றிய கட்டுரைகளோடு கூடிய இதழாக வெளிவந்தது.