பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49

49

அதனைத் தொடர்ந்து 1908இல் "ஆரோக்கிய வழி' என்ற இதழும் ஆயுர்வேத வைத்திய முறைகளின் அடிப்படையில் "ஆயுர்வேத பாஸ்கரன்' என்ற இதழு வெளிவந்தன. இவை யெல்லாம் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1909இல் பூனா நகரினின்றம் ஆரம்பிக்கப்பட்ட 'நல்வழி' இதழ் நீடித்த ஆயுளுடன் இன்றும்கூட வெளிவருகிறது

அறிவியல் இதழுக்கான தோற்றப் பொலிவுடன் "ஞான போதினி' எனும் ஏடு 1897ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் பூர்ணலிங்கம் பிள்ளையாவார். இதில் இடம் பெற்ற தத்துவார்த்தக் கட்டுரைகளிலும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளே அதிகமெனலாம். இதே போன்ற மற்றொரு ஏடு கல்யாண சுந்தர நாடன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சித்தாந்த தீபிகை’ எனும் இதழாகும். இதில் சமய, தத்துவ ஞானக் கட்டுரைகளோடு பெளதிக, இரசாயனக் கட்டுரைகளும் வெளிவந்தன

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமி ழாக்க நூல்கள் கணிசமான அளவுக்கு வெளிவந்தது போன்றே அறிவியல் இதழ்களும் ஒரளவு வெளிவந்தன. இவற்றுள் "தொழிற் கல்வி’ இதழாக 1914 முதல் வெளிவரத் தொடங்கிய இதழும் அதே ஆண்டில் மருத்துவ அறிவியல் கட்டுரைகளை வெளிவரிடுவதற்கென்று வெவிவந்த வைத்தியக் கலாநிதி" இதழும் குறிப்பிடத்தக்க இதழ்களாகும் 1917ஆம் ஆண்டில் தமிழர் கல்விச் சங்க வெளியீடாக வந்த "தமிழர் நேசன்' இதழ் ஒரு தனித்துவமான போக்கில் அறிவியல் செய்திகளையும் குறிப் புகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் நல்ல தமிழில் வெளியிட முனைந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவ இதழ்கள் சில அடுத்தடுத்து வெளிவந்தன. ஆயுர்வேத மருத்துவத்தை மக்களிடையே பரப்பு வதற்காக 'தன்வந்தரி' என்ற இதழ் சென்னை ஆயுர்வேதக் கல்லூரி சார்பில் வெளிவந்தது. இதே போக்கில் அமைந்த மற் றொரு மருத்துவ இதழ் "ஆயுர்வேதம்’ என்பதாகும். இவ் விரண்டு இதழ்களும் ஆயுர்வேத மருத்துவத்தின் பல்வேறு சிறப்புத் தன்மைகளையும் நோயறி திறனையும், மருந்துகள் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. இதே சமயத்தில் தான் ஆங்கில மருத்துவ முறையான அலோபதி மருத்துவ முறை பற்றிய கட்டுரைகளை அதிலும் குறிப்பாகக் குழந்தை நலம், மற்றும் மருத்துவ முறைகளை விளக்கும் வகையில் "ஆரோக்கி யமும் சிசுவின் சுகவாழ்வும்' என்ற மாத இதழும் வெளிவந்தன.

4