பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50

50

ஆனால், இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தியா வசியத் தேவையின் நிமித்தம் வெளியிடப்பட்ட இதழ்களில் பல அற்ப ஆயுள் உடையதாகவே அமைந்தன. மேலும் வெளியிடப் பட்ட தமிழாக்க, மூல நூல்களில் மிகுதியாக அமைந்தவை மருத்துவத் துறை நூல்களாகவும் வெளிவந்த அறிவியல் இதழ் களின் பெரும்பாலானவை மருத்துவ இதழ்களாகவுமே அமைந்

திருந்தமை இங்குக் கவனிக்கத்தக்கதாகும்.

மருத்துவத்துறை அறிவியல் தமிழாக்க நூல்கள் பெரு மளவில் வெளிவர வழிவகுத்த, கலைச்சொல் முதலாக பல முன் னோடிப் பணிகளுக்கு வழிகாட்டிய பெருமை ஃபிஷ் கிரீன் எனும் ஆங்கில மருத்துவரையே பெரிதும் சாரும்

விடுதலைபெற்ற பின்னர் வெளிவந்த அறிவியல் இதழ்களின் குறிப்பிடத்தக்க சிறப்புடன் அமைந்த இதழ் 1949ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் 'கலைக் கதிர் திங்களிதழாகும். தொடக்கம் முதல் 1984 ஆம் ஆண்டு வரை அறிவியல் கட்டுரைகள் அதிகம் இடம் பெறும் பல்சுவை இதழாகவே வெளிவந்தது. இவ்வேடு அதன்பின் மாற்றம் பல பெற்று அறிவியல் செய்திகளை மட்டும் தாங்கிவரும் முழுமை யான அறிவியல் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தக்க விளக்கப் படங்களுடன் தூய தமிழிலும் பல்வேறு தரப்பினருக் கும் மகிழ்வூட்டும் முறையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண் டிருக்கிறது.

இவ்விதழின் மற்றொரு சிறப்பம்சம் பலவேறு அறிவியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்களை, அறிவியல் எழுத்தாளர் களாக மாற்றிய பெருமையாகும். இதற்காக மறைந்த டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அவர்கள் மேற்கொண்டிருந்த இடை விடா முயற்சியும் இத்துறையில் கொண்டிருந்த ஆர்வப் பெருக் கும் என்றும் போற்றத்தக்கதாகும்.

'கலைக் கதிர்’ இதழ் அறிவியல் தமிழாக்கம், தழுவல், மூல மாக எழுதுதல் ஆகிய மூவகையிலும் அறிவியல் எழுத்தாளர் கட்கு ஆக்கமான பயிற்சிக் களமாகவே கடந்த இருபத்தைந் தாண்டு காலமாக விளங்குகிறதெனலாம்.

தமிழக அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் அறி வியலை தெளிவாகவும் சொற்செட்டோடும் பொருட் செறி வோடும் தமிழில் தரமுடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாக வும் உணர்த்தி, நிலைநாட்டிய பெருமை யுனெஸ்கோ கூரியர்'