பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
51

51

எனும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும் இவ்விதழ் 86 உலக மொழிகளில் வெளிவருகிறது. இந்தியாவில் தமிழிலும் இந்தி மொழியிலும் மட்டும் வெளிவரும் இவ்விதழ் 1967 ஜூலை முதல் தமிழல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இது கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு இதழாக அமைந்திருந்த போதிலும், மிக அதிக அளவில் இடம் பெறுவது அறிவியல் கட்டுரைகளேயாகும்: பக்கந்தோறும் படங்கள், பட விளக்கக் குறிப்புகளோடு வெளி வரும் திங்களிதழ். இதில் இடம் பெறும் அறிவியல் கட்டுரைகள் தற்கால அறிவியல் துறைகள் பலவற்றி லும் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் அவ்வத் துறைசார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அ ைவ க ள் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேனாட்டு இதழ் களுக்க இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத் தில் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இத்தகு அரிய வாய்ப் பபைப் பெற்ற ஒரே தமிழ் இதழ் இதுவேயாகும்.

இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகள் முழுவதும் மொழி பெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. ஆங்கிலக் கட்டுரை யின் அளவிலேயே தமிழ் மொழிபெயர்ப்புக் கட்டுரையும் அமைய வேண்டுவது தவிர்க்க முடியா த ஒன்றாகும். அதே சமயத்தில் மொழிபெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்கட்டு ஏற்படா வண்ணம் மூலமாகத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை போன்று தரவேண்டியுள்ளது. இதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு அறிவியல் கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வாறு புதிய புதிய மொழிபெயர்ப்பு உத்திகளைக் கண்டறிந்து செயல் படுத்த ஏற்ற களமாகித் தமிழில் இவ்விதழ் அமைந்துள்ள தெனலாம்

'கூரியர்’ இதழ் வாயிலாகத் தமிழுக்கு நாள்தோறும் ஏற்பட்டுவரும் ஆக்கம் புதிய புதிய கலைச்சொற்களின் தோற்ற மாகும். பெரும்பாலும் ஒலி பெயர்ப்போ அன்றி சமஸ்கிருதச் சொற்களோ அல்லாது, தூய தமிழில் கலைச்சொல்லாக்கம் இதழ்தோறும் செய்யப்படுகின்றன. இவ்வகையில் கடந்த இருப தாண்டுகளில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட கலைச்சொற்கள் கூரியர் இதழுக்கென உருவாக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தமிழின் தனித் திறனை உலகுக்குணத்துவதாக உள்ளது.

'கூரியர் சர்வதேசத் திங்களிதழ்மூலம் கடந்த இருபதாண்டு களாக அறிவியல் கட்டுரைகளைத் திட்பமுடன் கூறிய