பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

53

வருவதன் மூலம் தமிழ் ஓர் அறிவியல் மொழி' என்பது நேரடி யாகவும் மறைமுகமாகவும் எண்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாளிதழ்களில் அறிவியல் கட்டுரைகளை அவ்வப் போது வெளியிடும் இதழாகத் தினமணி' இதழ் விளங்குகிறது. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகளை, மெழிபெயர்ப்பாகவும் மூலமாகவும் எழுதி வெளியிடுவதோடு, அறிவியல் தமிழ் வளர்ச் சிக்குத் தடையாகவுள்ள பல்வேறு பிரச்சினைகளை அவ்வத் துறை வல்லுநர்களைக் கொண்டே விவாதிக்கும் இதழாகவும்

அமைந்து வருகிறது.

மறறும் குன்றக்குடி அடிகளாரின் முயற்சியினால் வெளி வந்து கொண்டிருக்கும் அறிக அறிவியல்' இதழும் இளம் விஞ் ஞானி’ இதழும் அறிவியலைத் தமிழில் சொல்லும் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன.

தனிப்பட்டவர்களும் இதழ்களும் அறிவியல் தமிழ் வளர்ச் சிக்கு உழைப்பது போன்றே பல்கலைக் கழகங்களும், பாட நூல் அமைப்பும் பல பொது நிறுவனங்களும் வெளியீட்டகங்களும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.

அறிவியல் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்கள்

அறிவியல் தமிழ் வவர்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1988ஆம் ஆண்டிலேயே தொடக்க முயற்சிகளை மேற் கொண்டது. கல்லூரி நிலையில் தமிழில் அறிவியலைப் போதிக் கும் வகையில் வேதியியல் (Chemistry) நூல்களின் இரு தொகுதி களைத் தமிழில் தயாரித்து வெளியிட்டது. அவ்வாறே 1941ஆம் ஆண்டில் இயற்பியல் (Physics) நூலின் இரு தொகுதிகளையும் 1942ஆம்ஆண்டில் உயிரியல் (Biology) நூலையும் தமிழில் வெளியிட்டது. இவை ஐந்தும் நல்ல தமிழில் வெளிவந்த தரமான வெளியீடுகளாகும்.

சென்னைப் பல்கலைக்கழகம் அறிவியல் நூலை எழுதும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 1988இல் அப்போதை சென்னை இராஜதானி முழுவதுக்குமான பரிசுத் திட்டத்தை அறி 'வித்து, தமிழ் மொழியில் மட்டுமல்லாது தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் வெளியிடும் சிறந்த அறிவியல் நூல்களுக்கு பரிசளித்து ஊக்குவிக்கும் கிட் டத்தை மேற்கொண்டது. இதனால் அறிவியலைத் தமிழில் தர விழையும் எழுத்தாளர்களுக்குப்புதிய உற்சாகம் ஏற்பட வழியேற்