பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53

58

பட்டது. ஈ. த. ராஜேஸ்வரி போன்ற அறிவியல் எழுத்தாளர் கள் அறிவியல் நூல்களை எழுதி பரிசு பெற இயன்றது.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக் குத் தமிழ்ப் பல் கலைக் கழகம் பல்வேறு வழிகளில் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. ஒரு புறத்திலே கலைச் சொற்களின் தொகுப்புப் பணியையும் மறு புறத்திலே அக் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் நூலகளை எழுதுமாறு அவ்வத்துறை வல்லுநர்களைத் தேர்வு செய்து, அப்பணியை ஒப்படைக்கிறது. இதனால், அறிவியல் தமிழ் நூல்கள் பெருமளவில் வெளிப்பட வாய்ப்பேற்படுகிறது. கல்லூரி மட்டத்தில் தமிழைப் யிற்சி மொழியாகக் கொண்ட மாணவர்கட்குப் பயன்படுவதைக் காட்டிலும் அவ்வத்துறை அறிஞர்கட்குத் தக்க ஆதார நூல்களாக (Source Books) இவை அமைகிறதெனலாம். இன்றைய நிலையில் அறிவியலைப் பொறுத்தவரையில் தமிழில் ஒவ்வொரு துறைக்கும் நிறைய ஆதார நூல்கள் தேவைப்படுகின்றன. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அறி வியல் நூற்பணி அமைந்து வருகிறது. அறிவியல் கலைக் களஞ் சியங்களைத் தொகுத்து வெளியிடும் பணியிலும் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது.

அத்துடன், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு சிக்கல்களை அறிவியல் தமிழ் அறிஞர்கள், வல் நர்களைக் கொண்ட கருத்தரங்குகள் மூலமாக அடிக்கடி விவாதித்து ஆக்க பூர்வமான முடிவுகளைப் பெறவும் வழியமைத்து வருகிறது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் அண்ணா பல்கலைக் கழகமும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்க வழிகளைக் காணுவதில் பெரும் பங்காற்றிவருகின்றன. அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றம் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் 'களஞ்சியம் முத்திங்கள் இதழ். அறிவியல் தமிழ் வளர்ச்சிக் கான சிக்கல்களை, துறைவல்லுநர்களைக் கொண்டும் தமிழறி ஞர்களைக் கொண்டும் விவாதித்துத் தீர்வுகாண வழியமைத்து வருகிறது நல்ல தமிழில் அறிவியல்-தொழில்நுட்பக் கட்டுரை களை எவ்வாறு எழுதலாம் என்பதற்கு முன்னோடியாக தமிழில் அறிவியல் கட்டுரைகளை இதழ்தோறும் படைத்து வெளியிட்டு வருகிறது.

"அறிவியல் இலக்கியக் கழகம்' என்ற புத்தமைப்பும் இத் துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றிவருகிறது. அண்ணா பல் கலைக்கழகமும், அறிவியல் இலக்கியக் கழகமும் இணைந்து