பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

அரசால் 1962ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நூல் வெளியீட்டு அமைப்பே தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் (Bureau of Tamil Publications) எனும் நிறுவனம் இக்கழகம் கல்லூரி மாணவர் கட்கு மட்டுமல்லாது பொது மக்களும் படித்தறியத்தக்க தமிழ் நூல்களை மூலமாகவும் பெயர்ப்பாகவும் வெளியிட்டுள்ளது. அவற்றில் முப்பது நூல்களுக்கு மேல் அறிவியல் நூல்களாக அதுவும் மூல நூல்களாக அமைந்தன. மற்ற சில நூல்கள் மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்களாகும்

இந்த அமைப்பே பின்னர் தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி. யுதவியைக் கொண்டு கல்லூரி மாணவர்கள் தமிழில் கற்பதற் கென எல்லாத் துறைகளிலும் மொழி பெயர்ப்பாகவும் மூலமாக வும் தழுவலாகவும் நூல்களைப் பெருமளவில் வெளியிட்டுள்ளது. இவற்றுள் அறிவியல் நூல்கள் சுமார் 450 ஆகும்.

இந்நிறுவனம் அதிக அளவில் அறிவியல் நூல்களை வெளி யிட வேண்டுமென்று வேட்கை கொண்ட அளவுக்குத் தகுதி மிக்கவர்களைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்பை ஒப்படைப்பதில் காட்டவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் அந்தந்தத் துறை பொருளறிவு மட்டும் இருந்தால் போதாது. தமிழில் ஓரளவு நல்ல புலமையும் தமிழில் எழுதும் ஆற்றலும் மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கத் திறனும் வாய்க்கப் பெற்றவர்களாலேயே சிறந்த முறையில் அறிவியல் நூல்களை மூலமாகவோ அல்லது மொழியாக்கமாகவோ உருவாக்க இயலும். அத்தகைய தகுதி மிக்கவர்களைத் தேர்வு செய்ததில் ஒருவித பின்னடைவு இருந்ததனால் சில அறிவியல் நூல்கள் செம்மையாக உருவாக இயலாமல் போய்விட்டது. எனினும் குறைந்த காலத்தில் நிறைய அறிவியல் நூல்களை உருவாக்கிய சிறப்புமிகு பெருமை இந்நிறுவனத்திற்குரியதாகும்.

பதிப்பகங்களின் பங்கும் பணியும

அண்மைக் காலமாகத் தனிப்பட்ட வெளியீட்டகங்களும் அறிவியல் தமிழ் நூல்களை வெளியிடுவதில் பேரார்வம் காட்டி வருவது இத்துறையில் ஆர்வமுடையோர்க்கும் ஊக்கமூட்டும் ஒன்றாகும். தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், நியூசெஞ்கரி நூல் வெளியீட்ட கம். வானதி பதிப்பகம், ஸ்டார் பிரசுரம், மீரா பப்ளிகேஷன்ஸ் போன்ற புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் பயனுள்ள பல அறிவியல் நூல்களை வெளியிட்டு வருகின்றன.