பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

81

அகம்-புறம் என வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் இகம்-பரம் எனச் சிந்தித்து வாழத் தலைப்பட்டனர். மக்கள் சமுதாயத்தின் புதிய எண்ணத்திற்கு ம். சிந்தனைக்கும், விருப்பத்திற்கும் ஏற்பவே, இலக்கியத்தின் பாடுபொருளும் அமைந்தது.

தமிழ்வழி சமய உணர்வு

சமய அடிப்படையில் புதிய சமுதாய உணர்வுக்கு வழி வகுத்த பெருமை வைதிக சமயத்தைவிட சமண, பெளத்த சமயங் களையே பெரிதும் சாரும்.

காரணம், வைதிக சமயம் தன் வேதமொழியாகிய சமஸ் கிருதத்திலிருந்த நான்கு மறைகளில் கூறப்பட்ட வேத உண்மை களை உள்ளது உள்ளவாறே தமிழில் தர விழையாதபோது, சமண, பெளத்த சமயங்கள் பாலி, பிரா கிருதம், பிராமி மொழி களிலிருந்த தங்கள் சமய உண்மைகளை மக்களின் தாய்மொழி யாகிய தமிழிலேயே தருவதில் மிகுந்த ஆர்வமும் துடிப்பும் காட்டின. எனவே, சமண, பெளத்த சமயங்களைச் சார்ந்த தமிழ்ப் புலவர்கள் தங்கள் சமய நெறிகளை , தத்துவ உண்மை களை, அக்காலத் தமிழ் மக்களின் மனப்போக்குக்கேற்பத் தமிழ் இலக்கியங்களாகத் தரவேண்டிய ஒருவகை கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது எனக் கூறினும் பொருந்தும்,

மாறிவந்த இலக்கிய வடிவங்கள்

இவ்வாறு சமய அடிப்படையில் உருவான இலக்கியங்கள், சங்க காலத்தில் சமுதாய அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடல்களின் இலக்கிய வடிவங்களிலிருந்துகூட மாறுபட்டு அமைந்தன எனலாம்.

எனினும், அத்தகைய சமயச் சூழலிலும்கூட ஆங்காங்கே பழைய அகம். புறம் பற்றி எழுதும் இலக்கிய முயற்சிகள் நடை பெற்றாலும்கூட, அவை மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க் காத நிலையே நிலவியது. இம்முயற்சிகளும் காலப்போக்கில் தேய்ந்துபோக வேண்டியதாகிவிட்டது.

பாதை மாறிய பாவினம்

சங் 5 காலத்தில் புலவர்களால் பெரிதும் போற்றிப் பின் பற்றப்பட்டு வந்த யாப்பு வகையான 'ஆசிரியப்பா'வின் ஆதிக் கம் குன்றத் தொடங்கியது. அறவுணர்வை, நீதி நெறிகளைப்