பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

புகட்ட இசைவான செப்பலோசை கொண்ட பா வகைய ை *வெண்பா முக்கியத்துவம் பெறலாயிற்று.

சங்கத்தை அடுத்துத் தோன்றிய அகப் பொருள் நூல் கவல் பெரும்பாலானவை வெண்பா' வடிவில் அமைந்தவைகளே யா கும். இக்கால கட்டத்தில் இயற்றப்பட்ட மிகப்பெரும் அறநூல கிய "திருக்குறள் குறள் வெண்பாவால் யாக்கப் பெற்றதாகும.

இக்கால கட்டத்தில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சமண சமயக் காப்பியமான சிலப்பதிகாரம்', சீத்தலைச் சாத்த னாரின் ‘மணிமேகலை’ ஆகிய காப்பியங்கள் ஆசிரியப்பா' வால் இயற்றப் பட்டவைகளாகும். ஐம்பெருங் காப்பியகளுள் தலையாயதாகக் கூறப்படும் சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு கதையின் இறுதியில் அப்பதிகத்தின்கண் கூறப்பட்ட செய்தி களின திரட்சியாக ஒரு வெண்பா பாடலே இடம் பெற்றுள்ளது என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இலைமறை காயான இலக்கிய உத்தி

சமய உணர்வு பெருமளவில் இல்லாத அக்காலத்தில் த மிழ்ச் சமுதாயத்தில் சமண சமயப் புலவர்கள் தங்கள் சமயக் கருத்துக் களையும் நேரடியாகப் பாடாமல் இலைமறைகாயாகவே எமுதி புள்ளார்கள் என்பது எண்ணிப்பார்க்கத தக்கதாகும். இன்றுங் கூட சிலப்பதிகாரத்தையோ'சீவக சிந்தாமணியையோ வளையா பதிக் காப்பியத்தையோ சமண சமயக் காப்பியங்கள்தாம் என அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியவில்லை. இனிப்புச்சுற்றோடு அமைந்த மருந்து வில்லைபோல் சமண சமய இலக்கியங்கள் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றில் சமண சமயப் பாத்திரங் களோ, சமணக் கருத்துக்களோ மிகுதியாக இடம் பெறவே செய்கின்றன,

இவ்வாறு வெளிப்படையாக இனங்காட்டிக் கொள்ளாம லேயே சமண காப்பியங்கள் எழுந்து மக்களிடையே பரவின. அக்காலச் சூழ்நிலைக்கு இத்தகைய இலக்கிய உத்தி இன்றி யமையாததாகத தேவைப்பட்டது.

உருமாறி வந்த தமிழ்ச் சமுதாயம்

சமண சமயத்தினரைப் பொறுத்தவரையில் உருமாறி வந்த அக் காலத் தமிழ்ச் சமுதாயப் போக்கின் தன்மையறிந்து, அதற் கேறப தமிழ்ப் படைப்புகளை உருவாக்க விழைந்தனர்.

எளிய முறையில் அமைந்த சிறுசிறு நீதி நூல்களின் மூலம் மக்களின் கவனத்தை எளிதாக ஈர்க்க முடியும் எனக் கருதி அக்