பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

88

காலத தமிழ் மக்களின் போக்கை அனுசரித்து நீதி நெறிகூறும் நூல்களைப் பெருமளவில் எழுதினார்கள். அறவுணர்வை உரு வாக்கவல்ல ஒழுக்கவியல் அடிப்படை யிலான திருக்குறள் நாலடியார், நான்யணிக்கடிகை போன்ற நீதி நூல்களைப் பெரு மளவில் எழுதினார்.

இலக்கியம் மூலம் மக்களிடையே மேலும் நெருக்கம் பெற விழைந்த சமணப் புலவர்கள், சங்கப் புலவர்களின் போக்கினின் றும் சற்று விலகி, புதிய போக்கில் தங்கள் சமய உணர்வூட்டும் நூல்களை எழுத முனைந்தனர்.

எழுத்ா இலக்கியமும் எழுத்துருப் பெற்றது

சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களில் பொதுமக் களிடையே வழங்கிவந்த நாட்டுப்புறக் கதை நிகழ்ச்சிகளோ அன்றாட வாழ்வில் கையாளப்பட்டுவந்த பழமொழிகளோ அதிக அளவில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. இப்போக்கை மாற்றியமைத்த பெருமையும் சமணப் புலவர்களையே சாரும்.

சமண சமயக் காப்பியமாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரி குன்றக்குரவை போன்றபகுதிகள் மூலம் அக்காலத் தில் பொது மக்களிடையே உலவிய கதை நிகழ்ச்சிகளும் பழ மொழிகளும் இடம்பெற்று இலக்கியத் தரத்தைப் பெற்றன.

காப்பியங்களில் மட்டுமல்லாது அறநெறிகளைப் பற்றிப் பேசிய நீதி நூல்களிலும் மக்களிடையே அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருந்த பழமொழிகள் பலவும் இடம்பெற்று இலக்கியவடிவில்பாடல்களாக மக்களிடையே உலவின. இதன் மூலம் மக்களுக்கும் இலக்கியத்துக்கும் நீதி புகட்டும் அறநெறி நூல்களுக்குமிடையே ஒருவித நெருக்கம் ஏற்படவே செய்தது. இத்தகைய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருப் பது பழமொழி நானூறு' என்ற நூலாகும். இந்த நீ தி நூலில் மக்களிடையே வழங்கிவந்த நானுாறு பழமொழிகள் இடம்பெற்று, இலக்கியத் தரத்தோடு மக்களைச் சென்றடைந்தன.

மருந்து இலக்கியங்கள்

அதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றி யமையாது இடம்பெற்று வந்த மருந்துப் பொருட்களை உள்ளி டாகக் கொண்டு சிறுபஞ்ச மூலம்', 'ஏலாதி போன்ற அறநெறி உணர்த்தும் நூல்கள் மக்களின் அன்றாட வாழ்வியல் மனப் போக்கை அனுசரித்து எழுத்ப்படலாயின.