பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
65

65

வில்லையெனினும், உரையாசிரியர்கள் மூலம் இந்நூல்களையும் பாடல்களையும் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கவே செய். கின்றன.

வடவரை விஞ்சிய இலக்கிய முயற்சி

வடமொழி இலக்கியங்களைப் போன்றே தமிழிலும் காப்பி யங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமிழைச் செழு மைப்படுத்த வேண்டும் என விழைந்ததன் விளைவே சிலப்பதி காரம் முதலான காப்பியப் படைப்புகள்.

இத்தகைய ஆர்வத்துடிப்பும் முயற்சியும் ஐம்பெரும் காப்பி யங்களின் தோற்ற வளர்ச்சிக்கு மூலாதாரமாயமைந்தது. இது ஒரு காலகட்டத்தின் இன்றிய மையா, அவசிய, அவசரத் தேவையை மட்டும் நிறைவு செய்யவில்லை, வடபுலமொழி :ளின் இலக்கியச் செழுமைக்கு ஈடாகமட்டுமின்றி அவற்றினும் மேலான நிலைக்குத் தமிழ் இலக்கியவுலகை உயர்த்திக் காட்டும் முயற்சி யாகவும் அமைந்தது என்பதை ஆழ்ந்து நோக்கினால் தெளி வாகும.

குடிமக்கள் காப்பியங்கள்

வடமொழிக் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவைகள் அரசகுல நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தன. ஆனால், சிலப்பதிகாரமும் மணிமேகலை யும் சாதாரண வணிகக் குடிமகனாகிய கோவலன்-கண்ணகியை யும்'ஆடல் மகளிரான மாதவியையும், மகள் மணிமேகலையையும் மையமாகக் கொண்டு பின்னப்பட்ட குடிமக்களின் காப்பியங் கள்’ என்ற போற்றத்தக்க சிறப்பினைப் பெற்றன.

இவ்வாறு இலக்கியத்தின் உள்ளீடாக சமயம் பரப்பும் பணிக்கு ஆற்றல் மிகு கருவியாகத் தமிழும் இலக்கியமும் திறமு டன் புலவர்களால் கையாளப்படும் நிலை உருவாக்கப்பட்டது. இதற்கேற்ப, தமிழ் மொழியும் இலக்கியமும் அகம்-புறம் எனப் பேசப்பட்ட சங்க இலக்கியப் போக்கினின்றும் மாறி, இகத்தை யும் பரத்தையும் பற்றி நுட்பமாகப் பேசும் சமயமொழி எனும் நிலைக்குத் தமிழ் இலக்கியம் மாறியது. இறையுணர்வூட்டும் சமய இலக்கியங்கள்

இலக்கியப் போக்கிலமைந்த நீதிநெறிகள் மட்டும் போதாது. இறையுணர்வுபொங்க மனதை இறைவன் மாட்டுச்செலுத்துவதன் மூலமே மனிதன் உய்ய முடியும் எனும் உண்மை புலவர் பெரு

5