பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

மக்களிடையே நாளடைவில் உரமடைந்தது இதற்கு அக்காலத் தில் நிலவிய சமயங்கள் மட்டும் காரணமன்று. அக்காலத் தமிழ் நாட்டில் நடை பெற்ற நிகழ்ச்சிகளும் நிலவிய குழப்பமுமே இத் தகைய மனப்போக்கு வளர்ந்து வலுப்பெற உறுதுணையாயமைந் தன. இதன் மூலம் தமிழும் இலக்கியப் படைப்புகளும் இறை யுணர்வூட்டும் பக்தியின் அடிப்படையில் உருவாகி, பக்தி இலக் கியங்கள்களாகவே மலர்ந்து மணம் பரப்பத் தொடங்கின.

சமண, பெளத்த பின்னடைவும் வைதிக சமய எழுச்சியும்

தமிழக மக்களிடத்தே நன்கு செல்வாக்குப் பெற்றிருந்த சமணமும் பெளத்தமும் தங்களுக்குள்ள பலத்தைப் பலரறிய எண்பிக்க முனைந்தன. இரண்டிற்கும் இடையில் நடைபெற்ற சமயச் சண்டைகள், அரசர்கள், மக்களிடையே ஒருவித வெறுப் புணர்வை வளர்க்க வாய்ப்பாயமைந்தின. இதனால், இச்சமயங் கள் மன்னர்களிடமும் மக்களிடமும் பெற்றிருந்த பிடி தளரவே, அவை பலவீனமடையத் தொடங்கின.

இத்தகைய சூழலைத் தனக்கு மிகவும் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள வைதிக சமயத்தவர் முனைந்தனர். அதுவரை மக்களிடையே சமணம், பெளத்தம போன்று அழுத்தமான செல் வாக்கைப் பெற இயலாதிருந்த வைதிக சமயம் தன் போக்கினின் றும் தளர்ந்து வரத்தொடங்கியது. தனது வைதிக சமயக்கருத்துக் களுடன் அப்போது தமிழக மக்களிடையே, அவர்களுக்கென்று உருவாகியிருந்த சிவன், முருகன் வழிபாடு, திருமால், கொற் றவை வழிபாடு ஆகிய வழிபாடுகளை வைதிக சமயம் ஏற்று, அவற்றைத் தன் அங்கமாக்கிக் கொண்டது. அதே போன்று சமண, பெளத்த நெறிகளில் சிறந்தவற்றையெல்லாம் கொஞ் சங் கொஞ்சமாக ஏற்றுத் தன தாக்கிக் கொண்டு சைவம், வைணவப் பிரிவுகளாக வலுவோடு மக்களிடையே சமயப்பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. தாங்கள் சிறப்பானதெனக் கைக்கொண்டிருந்த சமய நெறிகளையே வைதிக சமயம்’ என்ற புதுப்பெயரில் பிரச் சாரம் செய்து வந்தது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனை சமய இயக்கமாக, பக்தி இயக்கமாகவே, சைவ நாயன் மார்களும் வைணவ ஆழ்வார்களும், தமிழ் மொழி, இலக்கியப் படைப்புகள் வாயிலாக முனைப்போடு பரப்பி வந்தனர்.

அதுவரை நன்மை, தீமைகளைப்பற்றிச் சிந்தித்துவந்த தமிழ் இனம் பக்தி இயக்கத்தின் முனைப்பான பிரச்சாரம் காரணமாக பாவம், புண்ணியம் என்று சிந்திக்கவும் பேசவும் முனைந்தது.