பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழுக்கு இது பொற்காலம். தமிழை வளர்க்க, வளப்படுத்த முனைப்பான ஆக்கச் சிந்தனை அனைத்துத் தரப்பினரிடை யேயும் அழுத்தம் பெற்று வருகிறது. இது குறித்து நமக்கு நாமே அளவீடு செய்யும் மனப் போக்கும் வளர்ந்து வருகிறது

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழனுக்குப் பெருமை சேர்ப்பதில், பாராட்டிப் போற்றுவதில் பூரிப்படை கிறோமே, அதே போன்று நாளை நமது சந்ததியினர் நாம் விளைவிக்கும் அளப்பரிய சாதனைகள் குறித்து நம்மைப் பாராட்ட வேண்டாமா? அதற்காக நாம், நமது இன நலத்தைப் பொருத்தவரை என்ன சாதனைகள் ஆக்கபூர்வமாகச் செய் திருக்கிறோம். அல்லது செய்ய எண்ணிருக்கிறோம் என்பதைப் பற்றி சற்று உரக்கச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழைப் பொருத்தவரை அந்தந்தக் காலத் தேவைகளுக் கேற்பவே தன் வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருக்கிறது. சங்க காலத்தில் சமூக மொழியாக இருந்த தமிழ், பின்னர் சமய, தத்துவ உணர்வுகளைத திறம்படக் கூறவல்ல சமய மொழியாக உருமாறத் தவறவில்லை. வைதீக சமயமாகட்டும், அதனை எதிர்க்க எழுந்த சமண, பெளத்த சமயங்களாகட்டும் நீண்ட நெடுந்தொலைவுக்கப்பாலிருந்து வந்த கிருத்துவ, இஸ்லாமிய மார்க்கங்களாகட்டும், அத்தனை சமயங்களுக்கும் ஈடுகொடுத்து, தன் தனித்தன்மையை இழக்காமலும் அதே சமயம் அவ்வச் சமய மொழியாகவும் நெகிழ்ந்து கொடுத்து வந்ததனால்தான் இன்னும் தன்னியல்பு மாறாத தமிழாக, ஆற்றல்மிக்க மொழியாக விளங்கி வருகிறது. இதனையே பாரதியும் சமயந்தொறும் நின்ற தையள்’ எனத் தமிழன்னையைப் போற்றினான்.

சங்கம் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரையுள்ள கால கட்டங்களில், தன் வளர்ச்சிப் போக்கில் ஒருசில மாற்றங்களை தமிழ் ஏற்றுக் கொள்ள தயங்கவில்லை என்பது வரல ற்று உண்மையாகும். மாற்றங்களை ஏற்காத மொழியாகத் தமிழ் இருந்திருக்குமேயாகில் வடமொழியாகிய சமஸ்கிருதத்திற்கு ஏற் பட்ட நிலை, லத்தீன் மொழிக்கு ஏற்பட்ட கதி, தமிழுக்கும் ஏற். பட்டிருந்திருக்கும். காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப வளைந்து நெளிந்து கொடுக்கும் மொழியே கால வெள்ளத்தை