பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

வாழ்க்கைப் போக்கைச் சாடி குலம், கோத்திரம், சாத்திரங் களைக் கண்டித்தனர். கண்மூடிப் பழக்க வழக்கங்களெல்லாம் மண்மூடிப்போக வேண்டுமென சமூக சீர்திருத்த உணர்வை ஊட்டினர். "எளிய பேச்சு நடையில் தம் பாடல்கள் அமையுமாறு பார்த்துக் கொண்டனர். பாமரர்களும் தங்களுக்கான வேதமாக இப்பாடல்களைக் கருதவும் செய்தனர்.

சித்த மருத்துவ வளர்ச்சி

மன நோயைப் போக்க விழைந்த இச் சித்தர் பெருமக்களில் பலர் உடல் நோயைப் போக்கவல்ல மருத்துவர்களாகவும் அமைந்தனர். சித்தர் மருத்துவம்' எனும் புதுவகையான மருத் துவமுறையைத் தமிழில் தோற்றுவித்து வளர்த்தவர்கள் இவர்கள்.

ஆயினும், சித்தர் பாடல்களில் தாங்கள் கூறவந்த மெய்ஞ் ஞானச் சிந்தனைகளையும் மருத்துவ உண்மைகளையும் மறை பொருளாகவே பாடிச் சென்றனர். எனவே, ஆழ்ந்த ஞானப் பயிற்சியும் மொழித் திறனும் கொண்டு இப்பாடல்களை நுணுகி ஆராய்வோரோ அவற்றின் உட்பொருளை சரிவர அறிந்து பயன் பெற முடியும்.

சீர்திருத்த முனைந்த சித்தர் இலக்கியம்

அக்கால சமுதாயப் போக்கில் காணப்பட்ட பல்வேறு பிற் போக்குத் தன்மைகளையும் சமயத்தின்பால் ஏற்பட்ட பேரார்வம் காரணமாக மக்களிடையே அழுத்தமாகப் படிந்து போயிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களை யும் கடுமையாகச் சாடுவதற்கென எழுந்தவையோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வகையில் சமய உணர்வோடு, மெய்யறிவு புகட்டி , தவறான போக்கில் சென்ற சமுதாய த்தை தடுத்து நிறுத்தி, நல்வழிப் படுத்த எழுந்த சமுதாய சீர்திருத்த இயக்கப் பாடல்கள் எனக் கூறினும் பொருந்தும்.

அக்காலப் போக்கின் இன்றியமையாத் தேவையாக எழுந்த இந்த ஞான நூல்களின் வருகை மக்களிடையே சமயப்போர்வை யில் கடவுளர்களின் பெயரால் மண்டிக்கிடந்த அறியாமையை அகற்றவும் பொய்மையைப் போக்கி மெய்மை உணர்வு பெறவும் பேருதவியாயமைந்தது எனலாம்,

சந்த இலக்கிய வடிவங்கள்

அருணகிரிநாதர் வடமொழிச் சொற்கள் விரவிவர சந்தமிக்க இசைப்பாடல்களைக் கொண்ட திருப்புகழ் எனும் பெய்ரில்