பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74'

சிந்தனையோட்டமும் தடம் புரண்டு தடுமாறும் நிலை 'சிந் தனைத் தி த்தோடும் கற்பனை வளத்தோடும் சிறந்த கருத்துக் களை உள்ளடக்கி இப்பாடலை இயற்றியிருக்கிறேன் பரிசு கொடு' என மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கேட்கும் நிலை போய், எதைப் பாடினால் பரிசு கிடைக்குமோ அதைப் பாடிப் பரிசில் பெற்று வயிறு வளர்க்கும் நிலைக்குப் புலவருலகம் ஆட் பட்டு, தரம் தாழ்ந்துவந்த இடரான காலகட்டத்தில் எழுத்தா னி ஏந்தி இலக்கியம் படைக்க முனைந்தார்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

மாறும் இயல்பு .ெ பாண்ட மனித வாழ்க்கைக்கு மாறாத உண்மைகளைக் கூறவல்ல இலக்கியப் படைப்புகளை உரு வாக்குவதற்கு மாறாக, வெறும் உணர்ச்சிகளை மட்டும் வெளிப் படுத்தும் வெற்று இலக்கியங்களே பெருமளவில் உருவாகிவந்த நேரமும்கூட, ஆழிய கருத்தின், ஆழ்ந்த சிந்தனையின் வெளிப் படாக இலக்கியம் மலர்வதற்கு மாறாக, காமச் சுவையே இலக் கியப் படைப்பின் மையம் என்கிற தவறான உணர்வு புலவருல கில் அழுத்தம் பெற்றிருந்த காலமும்கூட.

இந்நிலையில்தான் காமத்தைப் பாட இஸ்லாமிய நெறி இடந் தராத காரணத்தால் ஒழுக்கவியல் அடிப்படை யில் நூற்றுக் கணக்கான இலக்கியங்களை உருவாக்கித் தந்தனர். சீறாப்புராணம் உட்பட இருபத்தி நான்கு காப்பியங்களைப் படைத்தளித்தனர். புலவர் நாயகம் சேகனாப் புலவர் மட்டும் நான்கு காப்பியங்களை இயற்றிப் புது வரலாறு படைத்தார்.

தமிழில் உள்ள இலக்கிய வடிவங்கள் அனைத்திலும் இலக் கியம் படைத்த இஸ்லாமியப் புலவர்கள் புதுவகையான இலக் கியத் துறைகள் பலவற்றைத் தமிழில் தோற்றுவித்தனர். இவற் றில் மசலா, கிஸ்ஸ்ா, முனாஜாத்து ஆகிய இலக்கிய வடிவங் களை அரபி மொழியிலிருந்தும் நாமா எனும் இலக்கிய வடி வத்தை பாரசீக மொழியினின்றும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

டிசலா இலக்கியங்கள்

"மசலா" என்றசொல் அரபிச் சொல்லான "மஸ் அலா’ என்ப தன் மருவுச்சொல்லாகும். இதற்கு'தேடுதல்','வினவுதல்','வினா' என்ற பொருள்கள் உண்டு. இஸ்லாமிய மார்க்கம் பற்றிய நிறை யறிவு பெற்றவரிடம் ஒருவர் சென்று, இஸ்லாமிய நெறியற்றி மேலும் தெரிந்து கொள்ள, தெளிவு பெற வினாவெழுப்பி உரிய விடைகளைப் பெற்று ஐயம் தீர்ப்பதோடு அறிவையும் வளர்த்துக் கெ ள்வதாகும். எனவே, தமிழில் எழுதப்பட்டுள்ள மசலா இலக்