பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
75

75

கியங்கள் வினா-விடை வடிவிலேயே அமைந்துள்ளன. இவ்வகை யில் ஆயிரமசலா, நூறு மசலா, வெள்ளாட்டி மசலா என மூன்று மசலா நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்நூல்களி ல் இஸ்லாமிய மார்க்கச் செய்திகளோடு அண் றாட வாழ்க்கைப் பிரச்சினைகளையும் தொட்டு விவாதிப்பதாக அமைந்திருப்பது மக்களின் வாழ்க்கையோட்டத்துடன் மார்க்க் உண்மைகளை உணர்த்த மேற்கொண்ட புதுவகை இலக்கிய உத்தியாகவுள்ளது. மேலும், மசலா நூற்கள் செய்யுள் வடிவிலும் உரைநடைப் போக்கிலான சொற்சித்திரமாகவும் அமைந்துள்ள தன் மூலம் புலமையாளர் தொட்டு சாதாரண படிப்மறிவுள்ள வரும் மார்க்க உண்மைகளை அறிந்து தெளிய வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

கிஸ்ஸா இலக்கியங்கள்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் தமிழுக்கு வழங்கப்பட்ட மற்றொரு இலக்கிய வடிவம் கிஸ்ஸா’ என்பதாகும் இஃது "கஸஸ்' என்னும் அரபச் சொல்லினடியாக வந்த சொல்லாகும். இதற்குக் கதை கேட்டல்' என்பது பொருளாகும்.

கதை கேட்ப்து என்பது சாதாரண மனித இயல்புகளில் ஒன் றாகும், உழைத்துக் களைக்கும் மக்கள் ஒய்வு நேரங்களில் கதை கேட்டு, அக்கதை தரும் மார்க்க உணர்வுகளை, நீதி நெறிகளை மனதுள் அசைபோட்டு தெளிவடைய வாய்ப்பளிக்கும் வகையில் நகைச்சுவையோடு கூடியதாக கதைகள் அமைந்துள் ளன. சுவையான கதைகளை பாடல் வடிவில் சந்தச் சுவை யோடு தந்து இன்புறுத்துவது இந்நூல்களில் காணும் மற்றொரு சிறப்பம்சமாகும். தீன் நெறி அடிப்படையில் வாழ்வியல் நெறி முறைகளை உணர்த்தும் வகையில் தக்க பாத்திரப் படைப்பு களோடு இருபத்தைந்துக்கு மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் தமிழில் உருவாக்கப்பட்டுளளது.

முனாஜாத் இலக்கியங்கள்

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழுக்கெனப் படைத்தளித்த மற்றொரு இலக்கிய வடிவம் முனாஜாத்து' என்பதாகும். இது அரபி மொழிப் பெயராகும் இதற்கு இரகசியமாய்ச் சொல்லுதல்" என்பது பொருளாகும். இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்து இறைவேட்டல் செய்வதாகும். எனவே, முனாஜாத்துப் பாடல்கள் அனைத்துமே இஸ்லாமிய பக்தி இலக்கியப் பனுவல் களாகவே அமைந்துள்ளன எனலாம். இறைவேட்டல் பாடல்