பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78

சாரும். இவ்வகையில் பத்திற்குமேற்பட்ட திருமண வாழ்த் து" நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வடிவத்தைப் பின்பற்றிய மாடசாமி ஆசாரியார் போன்ற பிற சமயப் புலவர் பெருமக்கள் "திருமண வாழ்த்து வகை இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

அரபுத் தமிழ்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழ் இலக்கிய உலகக்கு வழங்கிய எட்டாவது புதுவகை வடிவம் அரபுத் தமிழ் ஆகம். அரபி மொழி எழுத்துருவில் (லிபி) தமிழை எழுதுதே அாபத் தமிழ் வடிவமாகும்.

சங்க காலத்திலேயே சமணர்களும் பெளத்தர்களும் தங்கள் சமய உண்மைகளை, தங்கள் சமய மொழிகளான பாலி பிரா கிருதம், பிராமி எழுத்துருவில் (லிபி) தமிழ்ச் சொற்களைக் கொண்டு அமைத்து வழங்கிய பாலித் தமிழ், பிராகிருதத் தமிழ், பிராமித் தமிழ் போன்ற இலக்கிய வடிவில் நூல்கள் எழுதப்பட் டுள்ளன. அதனினும் சற்று மாறுபட்ட போக்கில் அமைந்ததே "அரபுத் தமிழ் வடிவம். தமிழில் இல்லாத ஒலிக் குறைபாட்டை நீக்கியதோடு தமிழின் சிறப்பெழுத்துக்கேற்ப அரபி எழுத்துக் களைக் கையாண்டு அரபுத் தமிழ' வடிவம் உருவாக்கப்பட்டது. இவ்வகையில் எழுந்த அரபுத் தமிழ் இலக்கியங்கள் நூற்றுக் கணக்கில் தமிழில் உள்ளன. இவ்வாறு இஸ்லாமியப் புலவர் உலகம் இணையற்ற பெருந்தொண்டை ஆற்றியிருப்பதோடு, அர பிய, பாரசீக மொழி இலக்கிய வடிவங்கள் நான்கைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்ததோடு தமிழுக்கென்றே தமிழ்ப் பெயரிலேயே நான்கு வகையான இலக்கிய வடிவங் களைத் தோற்றுவித்து, தமிழைக் காலத்திற்கேற்ப, திறம்பட்ட வளர்ப்புப் பாதையில், முன்னூறு ஆண்டுகாலம் தமிழை அழைத் துச் சென்று செழுமைப்படுத்தியுள்ளனர்.

கிருத்துவத் தமிழ்

இஸ்லாமியர்களைப் போன்றே கிருஸ்தவ சமயமும் குறிப் பிடத்தக்க வகையில் காலப் போக்குக்கு ஏற்றபடி தமிழ்ப் பணி யைத் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றியுள்ளது. தமிழில் இன்றைய வளர்ச்சிக்கு அன்றே அழுத்தமாக வழி கோலியவர்கள் கிருத்துவத் தமிழ்ப் புலவர்களே ஆவர். அத் துடன் இன்று புத்துலக இலக்கியத் துறைகளர்கத் தமிழ் இலக் கியத்தில் பேரிடம் பெற்றுவரும் புதினம், சிறுகதை, அறிவியல்