பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80

80

சங்க காலத்திற்குப் பின்னால்வந்த உரையாசிரியர் ஒருவகை உரைநடையைப் பின்பற்றி உரை எழுதினர். இதுவும் ஒருவகைச் செய்யுளைப் படிப்பது போலிருந்ததே தவிர இன்றுள்ள எளிய போக்கில் உரையாசிரியர்களின் உரைநடை அமையவில்லை. இறுதியாக ஆங்கிலேயர்களும் அவர்களைத் தொடர்ந்து சமயத் தொண்டாற்ற வந்த தமிழறிந்த பாதிரிமார்களுமே ஐரோப்பா வில் நடைமுறையில் இருந்து வந்த உரைநடையைத் தமிழிலே கையாண்டு, இக்காலப் போக்குக்கேற்ற முறையில் தமிழ் வளர்ச் சிக்கும் இலக்கியச் செழிமைக்கும் வேகமூட்டினர்.

வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட பெஸ்கி பாதிரி ..ாரே முதன் முதலாக உரைநடையில் நூலெழுதி இன்றைய உரைநடை வளர்ச்சித்கு வழிகாட்டியவர் எனலாம். அவரைத் தொடர்ந்து சீகன் பால்கு போன்ற மேனாட்டவர்கள் உரைநடை நூல் ,ளை உருவாக்கியிருந்த போதிலும், தொடர்ந்து பெருமளவில் உரை நடை நூல் உருவாக்கப்படவில்லை. காரணம், அக்காலத்தில் உருவாகி நிலவிய அரசியல் குழப்பங்களும் அதனால் சமூகத்தி லேற்பட்டிருந்த தளர்வுமேயாகும்.

தமிழில் மேனாட்டு இலக்கிய வடிவங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி உறுதிப் பட அமைந்ததாலும் அச்சுக் கலை தமிழகத்தில் காலூன்றி பதா லும் மேனாட்டு இலக்கிய வடிவங்கள் அனைத்தும் ஒவ்வொன் றாக தமிழில் உருவாகி நிலைபெறத் தொடங்கின.

ஆட்சியில் அமர்ந்திருந்த பணியாளர்களும் சமயத் தொண் டில் ஈடுபட்டிருந்த பாதிரிமார்களும் நாட்டு மொழியாகிய தமிழைப் படிக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அத் துடன் மக்களின் கல்வி வளர்ச்சியில் அரசு கருத்துன்றத் தொடங்கவே உரைநடையில் ஏராளமான பாடப் புத்தகங்களை உருவாக்கி வெளியிட வேண்டிய ஒருவித கட்டாயக் காலச் சூழல் எழுந்தது.

மேனாட்டில் துரிதமான அறிவு வளர்ச்சிக்கு வேக முடுக்கி யாகப் பயன்பட்டுவந்த அச்சுக்கூடங்கள் தமிழகத்திலும் அமைக் கப்பட்டு அதன் வாயிலாக ஏராளமான உரைநடை பாட நூல் கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதுவே தற்காலத் தமிழ் வளர்ச்சி விரைந்து நடைபோட பெருந்துாண்டுதலாக அமைந்தது. இதழ் இலக்கிய வளர்ச்சி

அச்சகங்களின் பெருக்கம் மாத வார நாளிதழ்களின் தோற்றத்திற்கும் வழி வகுத்தது. இதனால் எல்லாத் துறை