பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82

82

குடும்பங்கள் தவிர்த்து அன்னியர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியாதவைகளாகவும் இருந்து வந்தன.

வானவியல் போன்ற துறைகளைப் பற்றிய ஒருசில நூல்கள் எழுதப்பட்டிருந்தனவே தவிர, பெரும்பாலும் இக்கலைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்ட நூல்கள் ஏதும் எழுதப்பட்டி ருந்ததாகத் தெரியவில்லை ஆங்கிலேயரின் வருகையின் காரணமாக எல் லா நவீன கலைகளையும் பற்றிய தகவல்கள் நூலுருவில் தமிழில் வெளிவந்து, வேண்டியோர் கற்க வும் பேணவும் வழியேற்பட்டிருந்தது. இதனால் குறுகிய வட்டங் களுக்குள் முடங்கிக்கிடக்க நேரிட்ட அறிவுத் துறைகள் அனைத் தும் மக்களின் பொதுவுடைமையாக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் எழுந்த தொழிற் புரட்சியை அடுத்து எழுந்த பொருளா தார வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுக்கும் முறையில் இயந்திரப் பெருக்கங்களின் பயன்பாட்டைக் கூறவல்ல ஆங்கில நூல்கள் அளவுக்குத் தமிழிலே நூல்கள் எழுதப்படாமை, காலவேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல் இன்றையத் தலைமுறையைச் செய்துள் ளதை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

தமிழ் இலக்கிய ஏற்றுமதி

தமிழறிந்த கிருத்துவப் பாதிரிகளால் தமிழ் புதிய போக்கில் வளரத் தொடங்கியது. அதே சமயம் தமிழின் ஆற்றலை, இலக் கியச் செழிப்பை, அறநெறிக் கருத்துக்களின் உயர்வை ஆங்கில லத்தீன் மொழிகள் மூலமாக ஐரோப்பா மட்டுமின்றி அனைத்துல கும் அறிய வழியமைத்த பெருமை வீரமா முனிவர் என்றழைக்கப் பட்ட பெஸ்கி, ஜி.யூ, போப், கால்டுவெல் போன்ற பெரியார் களுக்கு உண்டு.

வீரமா முனிவர் திருக்குறள் அறத்துப் பாலையும் பொருட் பாலையும் முதன் முறையாக லத்தீன் மொழியில் எழுதி வெளி யிட்டார். அடுத்து, ஜி.யூ. போப் திருவாசகம், திருக்குறள், நாலடியார் நூல்களை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த் தளித்துள்ளார். அதேபோன்று கால்டுவெல் தமிழின் திறத்தை மற்றதென்னக மொழிகளால் மலையாளம், கன்னடம்,தெலுங்கு, துளு மொழிகளோடு ஒப்பிட்டாய்வு செய்து தமிழின் பெருமையை உலகறியச் செய்து பெருமை பெற்றார். இவரது 'திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம்' ஆங்கிலத்தில் அமைந்தது, தமிழின் பெரு மையை உலகறியச் செய்யும் வாய்ப்பாயமைந்தது.