பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
83

88

புதுக்கவிதை தோற்றம்

கருத்தையும் உணர்வையும் நிரல்படச் சொல்லுதற்கு வாய்ப் பாக உரைநடைத் தமிழ் வளரவே, எண்ணங்களை வெளிப் படுத்த செயற்கைத்தனமாகக் கையாளப்பட்டு வந்த கவிதைத் தமிழ்ப் பெருக்கம் தேய்மானம் அடைய நேர்ந்ததில் வியப் பில்லை. எதுகை, மோனை எழில்தரும் உவமை இத்தனையும் நாடி எங்கெங்கோ ஓடி வார்த்தை முடையும் போக்கினின்றும், இன்று கவிதையுலகம் மாறி புதுக் கவிதை” என்ற புதுவடிவம் எடுத்து வளரத் தொடங்கியுள்ளது. மின்னல் வெட்டுப்போல எண்ணும் எணணங்களை, உணர்வுகளை, சிந்தனைகளை ஆழிய கருத்துக்களை ஒருசில சொற்களைக் கொண்டு, படிப் போர் உள்ளம் எளிதில் ஏற்கும் வண்ணம் கூறும் புது உத்திகள் "புதுக் கவிதை'யில் திறம்படக் கையாளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு .ாலப்போக்கை அனுசரித்து, அவ்வக் காலத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நெகிழ்ந்து கொடுத்து" நீக்குவன நீக்கி, மாற்றுவன மாற்றி, ஏற்பன ஏற்று, கால வெள்ளத்தை வென்று, தன் மிடுக்குக் குறையாமல் இன்று தமிழ் இலக்கியவுலகம் விளங்கி வருகிறதென்றால் அதுதான் காலம் தமிழ் இலக்கிய உலகுக்குத் தந்துள்ள தனிப்பெரும் பரிசு.

இனி, அறிவியல் அடிப்படையிலான படைப்பிலக்கியத் துறை, எவ்வாறு காலப்போக்கிற்கேற்பத் தமிழில் கருக்கொண்டு உருவெடுத்து வளர்ந்து வருகிறதென்பதையும் வரலாற்றுப் போக்கில் ஆய்வோம்.

அறிவியலும் இலக்கியமும்

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொருத்தவரை அறிவியலும் இலக்கியமும் தாமரை மேல் தண்ணிராகவே இருந்து வந் துள்ளது. காரணம் இரண்டின் தன்மைகளும் வேறு பட்டன வாகக் கருதப்படுவதேயாகும்.

அறிவியல் என்பது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. எதுவாயினும் என்ன, ஏன், எப்படி என்ற கேள்வி உலைக் களத்தில் இடப்பட்டு, சோதனையில் கிடைக்கும் முடி வின் அடிப்படையில் உருப் பெறுவது அறிவியலாகும்.

இலக்கியம் என்பது உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுவது. இங்கு அறிவார்ந்த கேள்விக் கணைகளைவிட மகிழ்