பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84

84

ஆட்டும் இன்பத்துக்கே முதலிடம், அதற்காக உணர்ச்சி எனும் குதிரைகள் பூட்டப்பட்ட கற்பனைத் தேரில் ஏறியமர்ந்து சிந்தனைச் சாட்டையைச் சொடுக்கி, நினைத்தவாறெல்லாம் பயணம் செய்யும் இன் பப் பொழுதாக அமைவதே இலக்கியப் பயணம் என்று கூறலாம் இந்த இரண்டு தன்மைகளையும் தன்னுள் கொண்டு அமைவதே அறிவியல் இலக்கியமாகும்.

இனி தமிழரின் அறிவியல் சிந்தனைகளைக் காண்போம். அழகான அமைப்புகளோடு கூடிய நகரங்களையும் பாதுகாப்பு மிக்க கோட்டை கொத்தளங்களையும் காலத்தைவென்று நிற்கும் வானோங்கிய கோயில்களையும் கட்டுவித்த தமிழனுக்கு அறிவியல் அறிவும் தொழில் நுட்பத்திறனும் கைவரப் பெற்றதாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

தமிழர் போற்றி வளர்த்த போரியல்'

உலகெங்கும் வணிகம் செய்வதற்காகவுன்றி போருக்கென கப்பற்படையையே கொண்டிருந்தவன் பண்டைத்தமிழன்.உலகி லேயே கப்பலியல் நன்கறிந்த இனங்களில தமிழ்இனமும் ஒன்று. இதற்கான தொழில் நுட்பம் சிறப்பாக வளர்ந்தே இருந்திருக்க முடியும். இலைமறை காயாக இலக்கியத்தில் இடம்பெற்றசெய்தி களைத் தவிர்த்து வேறு தொழில்நுட்பத் திறன் விளக்கும் தனி நூல்கள் ஏனோ இல்லா தொழிந்தன.

வாழ்க்கையின் இரு கண்களாக காதலையும் வீரத்தையும் போற்றிய இனம் தமிழினம். தமிழகத்திற்கு அப்பால் இமயம் வரை, மலைநாடுகளையும் தரைநாடுகளையும் போர்த்திறத்தால் வென்றுவந்ததோடு, சிங்களம், சாவகம், கடாரம் போன்ற கடல் கடந்த நாடுகளையும்கூட போரில் வென்று வாகைசூடிய தமிழ் மறவர்களின் போர்ப்படை திறம்பட்ட ஒன்றாகவே இருந்திருக் கும் என்பதில் ஐயமில்லை. படை அமைப்பு, போர் உத்தி, போரிடும் முறை ஆகியவற்றை விளக்கும் போரியல் (Military Science) தமிழன் போற்றி வளர்த்த கலையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை விளக்கும் தனி நூல்களை கால வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதுபே லும்.

இத்தகைய அறிவியல், தொழில் நுட்பத்தைக் கூறவல்ல தனி நூல்கள் கிடைக்காவிட்டாலும் இலக்கியங்களில் ஆங்காங்கே சிறுசிறு செய்திகளாக இடம்பெறவே செய்கின்றன. அவைகளே நாமறியக் கிடைக்கும் தொழில் நுட்பத் தகவல்கள்.