பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

8$

சுவையூட்டத் தவறிய தொழில் நுட்ப நூல்கள்

இலக்கியங்கள் நிலைபெற்ற அளவுக்கு. அறிவியல் தொழில் நுட்ப நூல்கள் நிலைபேற்றுத் தன்மையைப் பெற இயலாமற். போனதற்கு முழு முதற் காரணம் இலக்கியங்கள், அறிவியல், தொழில் நுட்பத்திறனாளர்கள் உட்பட அனைவரையுமே ஈர்க்க வல்லனவாக அமைந்திருந்தன ஆனால், அறிவியல் தொடர் பான தொழில் நுட்ப நூல்கள அவ்வத்துறை சார்ந்தவர்களன்னி யில் பிறரை ஈர்ப்பனவாக சுவையாக அமையவில்லை. எனவே, பொது மக்களின் போற்றுதலுக்குட்படாத இத்தகைய நூல்கள் அத்துறை சார்ந்த குடும்பங்களின் குறுகிய எல்லைக்குள் முடங்கி, நாளடை வில் மறைய வேண்டியதாயிற்று.

கற்போரின் நெஞ்சங்களையெல்லாம் இலக்கியச் சுவையால் இன்புறுத்திய எழில் படைப்புகளான இலக்கியங்களில், புலவர் களால் தேவை நிமித்தம், குறிக்கப்பட்ட அறிவியல், தொழில் நுட்பச் செய்திகள் மட்டுமே இலக்கியததோடு இணைந்து நிலை .ே றுடையனவாக இன்றும் நிலவுகின்றன.

சித்தர்கள் போற்றிய மருததுவ இயல்

சித்தர்கள், மருத்துவர்களாகவும் விளங்கினார்கள். அவர் கள் இயற்றிய படைப்புகளில் மிகுதியாக மருத்துவவியல் பற்றிய தகவல்கள் கவிதை வடிவில் இலக்கியப் போர்வைகொண்டு அமைந்ததால், அவை மக்களால் பெரிதும் பேணப்பட்டன. இன்றும் அவை அழியாமல் வழங்கி வருகின்றன. அ. கிலும், இலக் கியத்தை எல்லாத் தரப்பினரும் போற்றிப் படிப்பதால் மருத்துவ வியலின் நுட்பம் தெரியாதவர்கள் அதனைத் தவறாகப் பயன் படுத்தி தீங்கு அடையக்கூடாது என்பதற்காக, மருத்துவ நுட்பங் களைக்கூட, அத்துறையில் போதிய அறிவும் பயிற்சியும் உள்ள வர்கள் மட்டுமே அறிந்து பயன்படுத்தும் வகையில் குழுஉக்குறி" (பரிபாஷை)யாகப் பயன்படுத்திச் சென்றுள்ளார்கள். இதன் மூலம் சித்த மருத்துவ நுட்பங்கள் இலக்கியப் போர்வையில் இன்றுவரை அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவம் அறிந்த சித்தர்கள் இலக்கியப் புலவு களாகவும் திகழ்ந்ததால் இச் சாதனையை நிகழ்த்த முடிந்தது இலக்கிய வடிவம் பெறாத மருத்துவ நூல்கள், பிற அறிவியல் துட்பத்திறம் விளக்கும் நூல்கள் எத்தனையோ இருந்திருக்கலாம் ஆனால், காலவோட்டத்தில் மக்களின் இலக்கிய இன்ப உண