பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

88

வோடு தொடர்ந்து பயணம் செய்ய இயலாதனவாக பின் தங்கி அழிந்துவிட்டன.

சமய நம்பிக்கைகளும் அறிவியல் உண்மைகளும்

சங்க காலத்தில் அறிவியலுக்கும் இலக்கியத்திற்கும் இருந்த இடைவெளியைவிட, பக்தி இயக்க காலத்திற்குப் பின்பு எழுந்த சமய இலக்கியங்களுக்கும் அறிவியலுக்கும் இடையே மிகப் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், சமய நம்பிக் கைகளும் அறிவியல் உண்மைகளும் இணைய முடியாத இணை கோடுகள் போல ஆகிவிட்டன. காரணம், சமயக் கொள்கைகள் சிலவற்றின் அடிப்படைக் கூறுகளைப்பற்றி அறிவியல் ஆய் வலர்கள் பகுத்தறிவு அடிப்படையில் வினாக்கள் தொடுத்து பலவீனப்படுத்துவதை சமய வாதிகள் அறவே விரும்பாததால், சமயத்தைப் பின் பற்றுவோர் விஞ்ஞானத்தை ஒதுக்கத் தூண்டப் படலாயினர்.

இந்நிலை இங்குமட்டுமா? அறிவியல் மறுமலர்ச்சி காண முனைந்த மேலை நாடுகளில்கூட தொடக்கத்தில் இந்நிலையே இருந்தது. சான்றாக, அறிவியல் மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக அமைந்தது இத்தாலியாகும். இத்தாலியில் பிறந்த கலீலியோ இயந்திரவியல் நுட்பங்களையும், வானவியலில் தான் கண் டறிந்த உண்மைகளையும் ஆய்வுபூர்வமாகக் கூறியபோது, கிருத்துவ சமய மாதா கோயில் அதிகாரம் அதை எதிர்த்தது. விளைவு அறிவியல் மறுமலர்ச்சியில் இத்தாலி பின்தங்கி நிற்க நேர்ந்தது.

அறிவியல் ஆங்கிலேயர் அடையாளமா?

அதனினும் சற்று வேறுபட்ட சூழ்நிலை இங்கே நிலவியது. ஆங்கிலேயர்கள் அறிவியலை இங்கு கொண்டு வந்து பரப்பி அழுத்தம் பெறச்செய்தனர். ஆனால், இங்குள்ள சிலர், அறிவி யலை ஆங்கிலேயர்களின் அடையாளமாகக் கருதி, ஆங்கி லேயர்களை மட்டுமல்லாது, அவர்கள் மூலமாக வந்த அறிவிய லையும் எதிர்க்க முனைந்தனர். இந்த எதிர்ப்போடு சமயப் போக்கும் இணையவே, மக்களிடம் ஒருவித அறிவியல் எதிர்ப் புணர்வு பரவலாக ஏற்படவே செய்தது.

ஆயினும், ஒருசில அறிஞர்கள் இலக்கியத்தின் மூலமாக அறிவியல் கருத்துக்களை மக்களிடையே பரப்ப விழைந்தனர்.

இவ்விழைவு சங்க கால முதலே இருந்து வந்துள்ளதாகக் கொள்ள லாம்.