பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

98

அறிவியல் துறைச் செய்திகளைக் கூறும் உரைநடை நூல்கள் பல வெளிவந்திருப்பது போன்றே, அறிவியல் செய்திகளைக் கூறும் கவிதைநூல்களும் சில இயற்றப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்க நூலாகக் கருதப்படுவது வித்துவான் ப. இராமலிங்கம் என்பவரால் இயற்றப்பட்ட அறிவு நூல்' வழிகாட்டி’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிவியல் கவிதை இலக்கியநூலாகும்.

இந்நூல் முழுமையும் கவிதை வடிவிலே இயற்றப்பட்டுள்ளது. 1949ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்நூல் இயற்கைச் சாத் திரம்', "இரசாயனச் சாத்திரம்', 'பெளதிகச் சாத்திரம்', என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதாக 172 பக்கங்களில்

அமைந்துள்ளது.

இந்நூல் அக்காலப் பாடத் திட்டத்தையொட்டி மாணவர்க் கான அறிவியல் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செய்யுள்களில் வரும் அறிவியல் கலைச் சொற்களுக்கான ஆங்கிலக் கலைச் சொற்கள் ஆங்காங்கே அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

நூலின் இறுதியில் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ள "பொருளகராதி இதற்கு முன் வெளிவந்த எந்த அறிவியல் நூல் களிலும் இடம்பெறாத ஒரு புது அமைப்பாகும்.

மாணவர்களுக்கென இவ்வறிவியல் கவிதை நூல் எழுதப் பட்டிருந்தாலும் எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மக்களும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாட வாழ் வில் பயன்பட்டு வரும் எளிய சொற்களைக் கொண்டு அறிவியல் அடிப்படைச் செய்திகளைச் சுவையுடன் சொல்வது இந்நூலிற் காணும் தனிச் சிறப்பாகும்.

புது வகை பிரபந்தம் போன்று அமைந்துள்ள இவ்விஞ்ஞான பாமாலையின் சொல்லும் நடையும் அறிவியல் கருத்துக்களை எளிதாகக் கற்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

உடலில் சதா ஒடிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்டத்தைப் பற்றிக் கூறும்போது,

'இரத்தம் என்றும் இடைவிடாமல் தன் இதயத்திலிருந்து பாய்குழல் மூலமாய் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் மீண்டும் வண்ண வடிகுழாய் மூலமாய்