பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
95

95

எனக் கூறுகிறார். இப்பாடலில், கந்தரி கஜங்கள்", "ஹரிகத புதி', 'பாக்கிய மிகஜங்கள் போன்ற வாயில் நுழையாத வட மொழிச் சொற்களைப் பயன்படுத்தி பாடல் புனையப்பட்டுள் ள்து. அத்துடன் சில கலைச் சொற்கள் ஆங்கில ஒலி வடிவத்தி லேயே'சோடியம்', 'பொட்டாசியம்","கால்சியம் போன்றகலைச் சொற்கள் ஒலி பெயர்ப்பாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும் பல பாடல்கள் பிற மொழிக் கலப்பில்லாது எளிமை யான சொற்களைக் கொண்டு உரைநடை வடிவோ என எண்ணும் வகையில்,

'எந்தச் சேர்க்கைப் பொருளிலும் உலோகம்

பிரித்தெடுக்க முடியுமோ அந்தச் சேர்க்கைப் பொருளே தாதெனப்படுமே” எனப் பாடுகிறார்.

பெளதிக சாத்திரம் என்ற தலைப்பில் இயந்திரங்களைப் பற்றிப் பாடும் போது,

"இருசில் கழன்று விளிம்பில் பள்ளம்

சார்ந்த க்க்கரம் கப்பியாம்: இதுவே இயக்கக் கப்பி நிலைக்கப்பியென

இருவகையாக இயம்பவும் படுமே".

எனக் கப்பிகளைப் பற்றி கவிதை புனைகிறார் விஞ்ஞான நிகழ்வுகளை விவரிக்கும்போது, அவைகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விடுகதை போடுவதுபோன்று.

'வேற்றுத் துருவம் விரைவுடன் கவரும்

ஒரே துருவம் ஒன்றையொன்று விரட்டும்’

எனக் காந்தத்தின் இயல்புத் தன்மையையும் துருவங்களோடு அவற்றிற்குள்ள தொடர்புகளையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.

மற்றொருவிடத்தில் ஒளியின் தன்மை எத்தகையது என்ப தைப் பற்றிக் கூறும்போது,

"ஒரு பொருள் தன்னை உவப்புடன் பார்க்க

உதவும் சக்தியே ஒளியெனப் படுவது'

என வெகு சுலபமாக சாதாரணப் படிப்பறிவுள்ளவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிய செய்யுட்கள் மூலம் தெளிவுறுத்து கிறார்.