பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடும் நகரமும் தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய நாடுகளுடன் தொண்டைநாடும் கொங்கு நாடும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்று கருதும் வழக்கம் முன்பு இருந்தது. இதனைப் பண்டைய இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. வியன் தமிழ் நாடு ஐந்து' என்று தண்டியலங்காரமும், 'தமிழ் மண்டிலம் ஐந்து' என்று திருமந்திரமும் கூறுகின்றன. சங்க காலத்தில் கொங்கு நாடு தனி நாடாகக் கருதப் பட்டது. கொங்கு நாட்டின் வரலாறு, நாகரிகம், கலை, பண்பாடு, பழக்க வழக்கம் பிற சிறப்புக்கள் ஆகியவை தனிப்பட்டவை. கொங்கு நாட்டு மக்கள் கொங்கர் எனப் பட்ட னர். இக்கொங்கு நாடு மேல் கொங்கு, வட கொங்கு, தென் கொங்கு, மழகொங்கம் (காவிரி யாற்றுக்குக் கிழக்கே உள்ள பகுதிகள்) எனப் பெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்கியது. நிருவாக வசதிக்காக இக்கொங்கு நாட்டை 24 நாடு களாகப் பிரித்தனர். பிற்காலத்தில் 24 நாடுகளிலும் சில உள் நாடுகள் இணை நாடுகள் பிரிந்து கொங்கு நாடு 42 நாடுகள் ஆயிற்றென வரலாறு கூறுகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற காலிங்கராயன் கால்வாய் பெரும்பகுதி மேல்கரைப் பூந்துறை நாட்டிலும், சிறுபகுதி மேல்கரை அரைய நாட்டிலும் பாய்கிறது. காலிங்கராயன் அணைகட்டிக் கால்வாய் வெட்டிய வள்ளல் காலிங்கராயன் பிறந்த நாடு,ஊர் இவைகளின் சிறப்பை ஒருசிறிது காணலாம். சு- 1