பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

99 தேர்ச்சி பெற்று விளங்கினார். இரண்டாம் சந்திர குப்தரும் ஹர்ஷரும் அக்பரும் தமிழகத்து மன்னர்களில் பலரும் எப்பொழுதும் வேதாந்த வல்லுநர்களைத் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தது போல இவரும் வேதாந்தப் பண்டிதர்களையும் தமிழ்ப் புலவர்களையும் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தார். எனவே இவரை அனை வரும் 'வேதாந்த துரை' என்றழைத்தனர். 7 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த இவர் 1881 ஆம் ஆண்டு கால மானார். பின்னர் இவருடைய தம்பி முத்துராமசாமிக் காலிங்க ராயர் 33 ஆம் பாளையக்காரர் ஆனார். இவர் 24-1-1864 இல் பிறந்தார். 17 ஆம் வயதில் பாளையக்காரர் ஆனார். இவர் இளமையில் குதிரை ஏற்றத்திலும் வேட்டையாடு வதிலும் சிறந்து விளங்கினார். மற்போரிலும் உடற்பயிற்சி யிலும் ஆர்வம் காட்டினார். இசையை முறையாகக் கற்றதோடு சிறந்த இசைப் புலவர்களையும் ஆதரித்தார். பாளையக்காரரானவுடன் திரு ரைட் என்ற ஆங்கிலேயரிடம் தனியாக ஆங்கிலம் கற்றார். அரண்மனையை அழகுபடுத்து வதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஜமீன் வருமானத்தை உயர்த்தினார். இவர் செய்த எல்லாச் சிறந்த பணிக்கும் திருவனந்தபுரம் மானுப்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். புலவர்க்கு என்றும் ஓய்விலாது உதவு கீர்த்தி ஓங்க வாழ்பவர் சமத்தூர்க் குறுநில மன்னர் வானவராயர் மரபினர். சேர அரசிடம் வானவராயர் பட்டம் பெற்றவர் கள். வணங்காமுடிப் பட்டம் பெற்ற அவர்கள் கொங்கு வேளாளரில் பவள குலத்தின் பண்புடைத் தலைவர்கள். 1894 இல் சமத்தூர்ப் பாளையக்காரர் வானவராயர் நோய் வாய்ப்பட்டார். ஊத்துக்குழிப்பாளையக்காரருக்கு உறவின ரான சமத்தூர்ப் பாளையக்காரர் தன் மகனை ஊத்துக்குழிப் பாளையக்காரரிடம் ஒப்படைத்தார். சமத்தூர்ப் பாளையக் காரரும் ஊத்துக்குழியில் தங்கியிருந்து 14-11-1895 இல்