பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 காலமானார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஊத்துக்குழிப் பாளையக்காரரிடமே சமத்தூர்ப் பாளையம் இருக்கட்டும் என்று செய்த பரிவுரையை அரசு ஏற்றுக் கொண்டது. சமத்தூர் ஜமீன் வருமானத்தை உயர்த்திச் சீர்திருத்தங்கள் பல செய்து சமத்தூர் இளைய ஜமீன்தாருக் கும் தன் மகளுக்கும் 1901 இல் மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார். மைவாடி ஜமீன்தார் இறந்தவுடன் மாவட்ட நீதிபதியின் அதிகாரப் பொறுப்பிலிருந்த இந்த ஜமீனை அரசு வேண்டு கோள்படி 1898 இல் அதன் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார். தாலூக்காக் கழகம், மாவட்டக் கழகம் இவை களில் உறுப்பினராக இருந்தார். கோவை வேளாண்மைக் கல்லூரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல நிலையங்களுக்கும் விழாக்களுக்கும் ஆயிரக் கணக்கில் நன்கொடைகள் அளித்தார். 1912இல் ஊத்துக்குழியில் ஒரு தொடக்கப் பள்ளியை ஏற்படுத்தி 3000 ரூபாய் மானியம் அளித்ததுடன் மாத வருமானம் நிலைத்து மானியமாக வரவும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தார். மிகச் சிறந்த அறிவாளியான இவர் பணியாட்களிடமும் மிக அன்பாக நடந்து கொண்டார். 1910 ஆம் ஆண்டு கொடிய பிளேக் நோய் உண்டானபோது அரிய பணிகள் பல புரிந்தார். இவருடைய பணியைப் பாராட்டிய அரசாங்கத்தினர் இவருக்கு 1913 இல் திவான்பகதூர் பட்ட மளித்துச் சிறப்பித்தனர். 1917 இல் ஜமீன் தார்கள் பிரதி நிதியாக இந்திய அரசுச் செயலாளர் மாண்டேகுவையும் இந்திய வைசிராய் செம்சுபோர்டையும் சந்தித்தார். 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 19, 20 தேதிகளில் பிராமணரல்லாதோர் மாநாடு (Non-Brahmin Conference) கூட்டப்பட்டபோது, வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து முக்கியப் பங்கேற்றார். அவர் காலத்தில் நடத்தப் பட்ட நான்கு மா நாடுகளிலும் கலந்து கொண்டார்.