பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

101 தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் (South Indian Liberal Federation) உறுப்பினராக இருந்தார். இன்றைய தமிழக அரசியலுக்குக் கால்கோளாக இருந்த அந்த அமைப்புக் களைத் தோற்றுவித்துக் கட்டிக் காத்த பெருமை முத்துராமசாமிக் காலிங்கராயரையே சேரும். சென்னை ஜமீன்தார்கள் நிலக்கிழார்கள் சங்கத்தின் (Madras Zamindars and Landlords Association) துணைத் தலைவராக விளங்கினார். இவர் பொதுமக்களுக்காகப் பல்வேறு நன்கொடைகளைப் பெரிய அளவில் வழங்கினார். 1. பிராமணரல்லாதோர் மாநாடு 2. இங்கிலாந்து இளவரசரின் திருமணம் 3. சென்னையில் அமைக்கப்பட்ட ராஜ்குமார் கல்லூரி 4. டாக்டர் நாயர் அவர்களின் நினைவு நிதி 5. குன்னூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம் 6. வேல்ஸ் இளவரசரின் வரவேற்புக்குழு 7. குன்னூரிலுள்ள லாலி மருத்துவமனை ஆகியவற்றிற்குப் பெருந்தொகை வழங்கினார். இவர் 1918 இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக் குன்னூர், கொடைக்கானலில் ஓய்வெடுத்து வந்தார். 1931 இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். கோவையில் முக்கியமான தெரு ஒன்றிற்குக் காலிங்க ராயர் தெரு என்று பெயர் வைத்திருப்பது கோவை மக்களுக்கு இக் குடும்பத்தின் மீது இருந்த பற்றுக்கு எடுத்துக் காட்டாகும்.