பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 பூந்துறை நாடு புகழ் தங்கும் பூந்துறைநாடு கொங்கின் 24 நாடுகளிலே முதன் மையான சில நாடுகளில் ஒன்று. கிழக்கே காவிரியாறு, தெற்கே காஞ்சி எனப்படும் நொய்யலாறு, மேற்கே சென்னிமலை, வடக்கே வானி எனப்படும் பவானியாறு இவ்வெல்லைகட்குட்பட்ட 32 பழம் பெரும் ஊர்களைத் தன்னகத்தே கொண்டது பூந்துறை நாடு. காவிரிக்கு மேற்கேயுள்ள காரணத்தால் இந்நாடு - மேல்கரைப் பூந்துறை நாடு' என்றும் பெயர் பெற்றது. 'உன்னிய தெற்கில் காஞ்சி உயர்நதி வடக்கு வானி பொன்னிமா நதியே கீழ்பால் புகன்றிடும் மேற்குத் திக்கில் சென்னிமா மலையே யாகும் - சிறக்கமுப் பத்தி ரண்டூர் மின்னுமேல் கரையாய்க் கொண்டு விளங்குபூந் துறைநன் னாடு' என்பது பூந்துறை நாட்டின் எல்லைகளைக் கூறும் பூந்துறைப் புராணப் பாடலாகும். நாட்டுச் சிறப்பு அடியார்களுக்காக இந்நாட்டில் பொன்மாரி, பூமாரி பெய்தது என்பர். திருமலை நாயக்கனின் அரசியல் அதிகாரியாகிய இராமப்பையனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு சங்ககிரியில் முடிசூட்டியவர்கள் பூந்துறை நாட்டினரே! சேரமான் பெருமாள் நாயனார் பூந்துறை நாட்டுக்கு வந்து ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து அழைத்துக் கொண்டு சென்று முடிசூட்டிய பின்னரே கயிலை சென்றார் என்பது பூந்துறைத் தலபுராணத்திற் காணப் படும் செய்தியாகும். இக்கருத்தைக் கேரள தேச வரலாறும், சோழன் பூர்வபட்டயமும் ஆதரிக்கின்றன. இந்நாட்டின்