பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 தனிப்பாடல் ஒன்று பாரப்பத்தியம், மேல் மணியம், டபேதார், சுபேதார் இவர்கள் அணை, கால்வாய் நிருவாகி கள் என்றும், தாசில்தார் இவர்கட்கு மேல் அதிகாரி என்றும் இவர்கள் பொருட்டு செய்க்கு 5 வள்ளம் நெல் அளக்க வேண்டும் என்றும் கூறுகிறது. சிவிலிஞ்சினியர், பிரின்சிபல் கலெக்டர் ஆகியோர் இவர்களின் மேல் உயர் அதிகாரிகள் ஆவர். காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அப்பணிக்காகக் கொடுக்கப்படும் நெல் ' அணை வள்ளம்' என்னும் தனி அளவை மூலம் அளந்து தரப்பட்டது என்பதும் தெரிகிறது. அடிக்கடிப் பாலங்கள் பழுதுபார்த்துக் கால்வாய் மராமத்து வேலைகளும் நடக்கவேண்டும் எனக் கூறுகிறது அப்பாடல். அரசு, முத்திரைக் காகிதம் அவ்வப்போது அனுப்பும் என்றும், முத்திரைக் காகிதத்தில் கண்டுள்ளபடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றும் அதற்கு மாறுபட்டால் கையிழுத்துப் பிடித்து கடுந்தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக மதகைப் பிடுங்கி நீர் பாய்ச்சினால் 5 ரூபாய் அபராதம் போட்டுக் கழுத்தில் துடும்பு போட்டு அடித்து வாசியூர் (பாசூர்) முதல் ஆவுடையாபாறை வரை அவன் தவறு எல்லோருக்கும் தெரியும்படி செய்யப்படும். - சுமார் 170 ஆண்டுகட்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் கால்வாய் பொதுப் பணித்துறை நிருவாகத் தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இன்று வரை அணையை யும் கால்வாயையும் பொதுப்பணித்துறையே நன்கு கவனித்து வருகிறது. பொதுப்பணித்துறை நிருவாகத்தின்கீழ் அணை யும் கால்வாயும் வந்ததும் 1832 இல் பல பகுதிகளில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் அணைத்தோப்பு, காலிங்கராயன் பாளையம், கொம்பணை ஆகிய இடங்களில் உள்ளன. ஹி.டி. டுறாறி மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பேப்பர்