பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

107 துரை சிவில் எஞ்சினியராகவும் இருந்தபோது 1832.. 1833 இல் சுப்பராயர் என்பவர் பாலங்கள் அமைத்ததாக அக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 1832, 1868, 1891, 1936, 1954, 1962, 1974 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. 1973-74 இல் 66 லட்சம் ரூபாய் செலவிடப் பட்டது. அதற்காகத் தனிப்பிரிவு ஏற்பட்டது. அத்தனிப் பிரிவு 30.6.1977ல் கலைக்கப்பட்டது . காலிங்கராயன் கால்வாயில் மொத்தம் 769 மதகுகள் உள்ளன. இம்மதகுகள் யாவும் கால்வாயின் இடது பக்கத் தில் அமைந்துள்ளவையாகும். வலது பக்கம் பெரும்பாலும் நிலம் மேடாக இருக்கும் காரணத்தால் அடைக்கப்பெறாத குழாய் மூலமாகவோ அல்லது கால்வாயின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உயரமான துலைகளின் மூலமாகவோ மாடுகளைக் கொண்டு இறைத்து நீர்ப்பாசனம் செய்கிறார் கள். அண்மையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பலர் புதிதாக வலதுபுறம் வைத்துள்ளதால் முதலில் 1950 வரையிலும், பின்னர் 2.10-1961 வரையிலும், பின்னர் தற்போது 1984 வரையிலும் அவ்வாறு வைத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கினர். இப்போது 1984க்குப் பின்னர் இயந்திரம் பொருத்தியவர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது . 1962-73 வரை நீர் இறைக்கும் இயந்திரங்கள் 68% அதிகரித்துள்ளது. வலது புறம் அமைக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் மாடுகளுக்குப் பதிலாக அமைக்கப்பட்டது தான். வேளாண்மையில் மாடுகட்குப் பதிலாக இயந்திரக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கருதி 2-12-1962 பொதுப்பணித்துறை ஆணை எண் 3339 இன்படி அனை வருக்கும் அனுமதி அளிக்கலாம். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும். தலைப்பு மதகுகள் 1879 ஆம் ஆண்டு கட்டப்பட்டன. காலிங்கராயன் கால்வாயில் அதிகபட்சம் உயரம் நீர் தேங்கி நிற்கும் அளg 8 அடியாகும்.