பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

109 போதிய அளவிற்குத் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப் பட்டுக் கரை பாதுகாக்கப்படுகிறது. இப்போது அண்மையில் சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்ற இடங்களில் ஓடை நீர் கால்வாயில் கலக்காமல் மேலே செல்லவும் கால்வாய் கீழே குழாய் மூலம் செல்லவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் சைபன் எனப்படும் இத்திட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப் பட்டதும் முக்கியமான இடங்களில் தேவையான பழுது பார்க்கப்படுகின்றன. அதற்காகத்தான் குறைந்தது 45 நாட்களாவது தண்ணீர் நிறுத்தப்படும். தொலைபேசித் தொடர்பு பொதுப்பணித் துறை யினரால் அமைக்கப்பட்டுக் காசிபாளையம் அருகிலும் பவானி அணைக்கட்டிலும் ஈரோடு தலைமை அலுவலகத் திலும் இயங்குகிறது. அவ்வப்போது முக்கியமான செய்தி கள் இருப்பின் தொலைபேசி மூலம் தொடர்புடைய அலுவலர்கட்கு அறிவிக்கப்படுகிறது. முழு அளவு நீர் மட்டத்தைக் குறிக்கும் அளவு கோல்கள் கால்வாயில் மொத்தம் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களிலிருந்தும் அன்றாட அளவு ஈரோட்டிலுள்ள தலைமை நிலையத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் பவானி அணைக்கட்டுக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. அச்செய்திகட்கு இணங்க அணைக் கட்டில் இருக்கும் நீர்ப்பதிவாளர் நீர் பகிர்ந்தளித்தலைச் செய்வார். ஒவ்வொரு நீராணியும் தன்னுடைய பகுதியில் உள்ள மதகுகளைக் கவனித்துக் கொள்வதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் தொடர்புடைய மேலதிகாரிகள் ஆணைக்கு இணங்க இரவு நேரங்களில் மதகுகளை அடைத்து வாய்க்காலின் கடைசிப் பாகத்திற்குத் தண்ணீர் சரியான அளவிற்குச் செல்லப் பொறுப்புடன் உதவி புரிகின்றார்கள். நீராணிகள் சரிவரக் கவனிக்கிறார்