பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 களா என்பதை மேற்பார்வையிட ஒரு கரைக் கண்காணிப் பாளர் உள்ளார். நீராணிகளையும் கரைக் கண்காணிப் பாளரையும் நீர்ப் பதிவாளரையும் கண்காணித்துக் கொள்ளப் பிரிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு பொதுப்பணித்துறைக் கோட்டத்தின் நிருவாகத்தில் உள்ள மேற்குச் சிறுகோட்டத்தினரால் இப்போது காலிங்கராயன் கால்வாய் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அத்துறையினரால் கீழ்க்கண்டவாறு காலிங்க ராயன் கால்வாய் நிருவாகம் இன்று நடைபெறுகிறது, நிருவாகப் பொறியாளர் உதவிச் செயற் பொறியாளர் - - பிரிவு அதிகாரி அல்லது இளம் பொறியாளர் நீர்ப்பதிவாளர் (அல்லது) கரை கண்காணிப்பாளர் நீராணி காலிங்கராயன் அணையில் கால்வாய்க்கு நீர்வரும் தலை மதகுகள் ஆறு கண்ணறைகளாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் அளவுகள் 6'.6”X4'.6” ஆகும். மணற்போக்கிகள் மூன்று கண்ணறைகளாக அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அளவுகள் 6'.0"x4'.6” ஆகும். காலிங்கராயன் கால்வாயில் காலத்துக்குக் காலம் பல சீரமைப்புக்கள் செய்யப்பட்டுப் பொதுப்பணித்துறையில் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டும் நிர்வகிக்கப் பட்டும் வருகிறது. பொதுப்பணித்துறையில் அவ்வப்போது பின் வரும் சீர்திருத்தங்கள் மிக நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது. 720 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான அணையையும் வெட்டிய கால்வாயையும் கண்மணியை இமைகள் காப்பது போல்