பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

111 பொதுப்பணித் துறையினர் அல்லும் பகலும் அயராது காத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை கீழ்வரும் சீரமைப்புக்களைச் செய்துள்ளது. 1. வாய்க்கால் சைபன் கட்டுதல் 2. ரெகுலேட்டர்கள் கட்டுதல் 3. வாய்க்காலினுள் மாதிரிக் கட்டிடங்கள் அமைத்தல் (Model Section) நீர் வெளியேறும் பகுதிகள் கட்டுதல் (Out lets) 5. நீர் தேங்கிக் கீழிறங்கும் பகுதிகள் அமைத்தல் (Drops) கரைகளை அகலப்படுத்திச் சாலைகள் அமைத்தல் தூர் எடுத்தல் 8. கரைச் சரிவுகளில் கருங்கல் கட்டிடம் கட்டுதல் (Revetments) கரைகளைப் பலப்படுத்துதல் 10. பின் தொட்டிகள் அமைத்தல் (Rear cisterns) 11. கால்வாயில் தேவைக்கேற்பத் தண்ணீரைத் தேக்கும் அமைப்பை ஏற்படுத்துதல் (Bed Regulaters) இப்பணிகளால் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்பட்டுப் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க ஏதுவா கிறது. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி வேண்டிய தண்ணீரை நிறுத்தச் செய்து தேவைக்கு ஏற்பச் சமமான தண்ணீரைப் பங்கீடு செய்வதற்கு வழிவகைகள் அமைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மிகச்சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டுவரும் கால்வாய்களில் தலை சிறந்தது காலிங்கராயன் கால்வாயே ஆகும். தடப்பள்ளிக் கால்வாய் சீரமைக்கப்பட்ட போது அதில் உள்ள 448 மதகுகள் 316 ஆகக் குறைக்கப்பட்டன. அரக்கன் 9.