பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

113) பவானி ஆற்றில் அணைத் தோப்புக்குக் கிழக்கே ஆழமான ஆற்றுப் பகுதியில் தண்ணீர் செல்வதை முரியன் அணை தடுத்து மேற்குப் பக்கம் காலிங்கராயன் அணைப் பக்கம் தண்ணீரை அனுப்புகிறது. பவானியாற்றின் நடுவே கட்டப்பட்டிருக்கும் கலிங்கின் உதவியால் நீர்மட்டம் உயர்ந்து எளிதாகக் காலிங்கராயன் கால்வாய்க்குத் தண்ணீர் வருகிறது. மிக எளிய அமைப்பைத் திட்டமிட்டு 720 ஆண்டுகட்கு முன்பு தேர்ந்த பொறியியல் அறிவுடன் கட்டி முடித்த அணையும் கால்வாயும் அறிஞன் காலிங்க ராயன் புகழ்பாடி சந்திரசூரியர் உள்ளவரை நின்று நிலைக்கும் என்பது திண்ணம்! பேரரசர்கள், அரசர்கள் உருவாக்கிய கால்வாய்களைத் தமிழகமெங்கும் காணுகின்றோம். ஆனால் ஒரு சாதாரணக் குடிமகன் தன் அறிவாற்றலால் பதவி பெற்று நாடு நலம் பெற நன்செய் வளம் செழிக்க இவ்வாறு திட்டமிட்டுச் சொந்தப் பொறுப்பில் கால்வாய் வெட்டி அதனைப் பொது வுடைமையாக்கி அனைவரின் பயனுக்கு விட்ட அரிய செயல் உலகில் வேறெங்கும் நடைபெற்றதில்லை. கீழ்பவானி, கொடிவேரி போலப் பெரும்பாலும் அதிக நிலம் இல்லாமல் 1 ஏகர் 'ஏக்கர்' 2 ஏக்கர் உடைய விவசாயி களே காலிங்கராயன் பகுதியில் அதிகம். தம் உழைப்பால் அவர்கள் பொன் கொழிக்கச் செய்கிறார்கள். இந்தியா விலேயே பஞ்சாபிற்கு அடுத்தாற்போல் இங்கு தான் கடுமையாக உழைத்து நல்ல வருமானம் பெறுகின்றனர்.