பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 மங்கலத்து ஊரும் ஊராளிகளுக்கும் தங்களுடைய வாகைப் புத்தூரில் வடக்கு வாகசைலில் வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடக்கிறதாகக் கேட்டோம் இக்குளம் தங்களூர் நாயனார் திருநாகீசுரமுடையார் திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாாச்சியர்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனம் பலபடி நிமந்தத்துக்கு இக்குளம் வீரபாண்டியப் பேரேரி எனவும் இக்குளமும் இக்குளக்கீழ் நிலமும் நீர்யேறிட மெல்லாம் இறையிலி தேவதானமாக விடுக எனத் தோண்டும் வாரம் குடுக்கப் போதுவார்களாகவும் இக்குளக் காலுள்ள அழிவு சோர்வு தாங்களே செய்வார்களாக இப்படி சந்திராதித்தர் வரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி அனுபவிக்கக் கடவதாக நம் ஓலை குடுத்தோம். இப்படியே நந்தமர்ப்பாற்படுத்திக் கொடுக்கவும் இது பன் மாகேஸ்வரர் ரட்சை இவை காலிங்க ராயன் எழுந்து......இத்தர்மம் இறங்கப் பண்ணினவன் வழி வழி யேழெச்ச மறுவான். நெரூர் அக்கீனீசுரர் கோயில் தென்புறத்து மதில் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கிரவர்த்திகள் கோனே ரின்மை கொண்டான் கிழங்கு நாட்டு நெரூரான வீர சோழச் சதுர்வேதிமங்கலத்து உடையார் திரு அக்கினீசுர முடைய நாயனார் கோயில் தானத்தாருக்கும் இந் நாயனாருக்கும் அமுதுபடி உள்ளிட்டு வெஞ்சனங்களுக்கும் தை மாதத்து நம் பிறந்த நாளில் தீர்த்தம் பிரசாதிக்கக் கட்டின திருநாளுக்கும் இந்நாட்டில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தமும் நான் கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் நன்செய் புன்செயும் நத்தமும் தோட்டமும் குளமும் குளப்பரப்பும் உள்பட்ட நிலத்தில் பழந்தேவதானம் பள்ளிச்சந்தம் நீக்கி நின்ற நிலம் ஒட்டச்சு ஆராய்ச்சி நத்தவரியும் மண்டல முதன்மை சந்தி விக்கிரகப் பேறுவரியும் மார் வினியோகமும் எலவை உகவை காணிக்கை காலிங்க