பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

121 ராயன் வினியோகமும் ஓலைச் சம்படம் அணியில் பொன்வரி யும் வேளைக்காரன் சிரக்காரன் கார்த்திகைப்படியும் சானங் கண்மையும் நல்லெருது நற்பசு காணம் நெய் எண்ணையும் உப்பாயம் தறியிறை செக்கிறையும் தட்டொலிப் பாட்டமும் ஈழம் புஞ்சையும் பாமைக்காணம் கீழிறை தோலொட்டும் மன்றுபாடு தெண்டங்குத்தமும் மத்தும் எப்பேர்ப்பட்ட வரி களும் உள்பட்டது பன்னிரண்டாவது மாசி மாதம் முதல் தேவதானம் இறையிலியாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு நான்கெல்லையிலும் திரிசூலக்கல்லு நாட்டி சந்திராதித்தவர் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கச்சிராய நல்லூர் என்று குடியேற்றிக் கொண்டு அனுபவிக்க இவை காலிங்க ராயன் எழுத்து... யாண்டு 12 நாள் 256... அக்கினீசுரசுவாமி துணை . எலத்தூர் சோழீச்சுரர் கோயில் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரிமை கொண்டான் வட பரிசார நாட்டு எலத்தூரு ஊரார்கள் தங்களூருடையாருக்கும் சோளீஸ்வரமுடையாருக்கும் தான் தோன்றீஸ்வரமுடைய நாயனார்க்கும் சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இவ்வூர்க் கொளம் உடைகுளம்...யிருந்தபடியிலே பத்தினால் சித்தார்த்தியாண்டு முதல் குளம் அடைத்துத் திருத்தி பயிர்செய்து பயிர் செய்யு மளவில் திருத்தின நிலத்துக்கு யி... டை... அந்தராயம் இலவை உகவை காணிக்கை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் இந்நாள் முதல் யிறையிலியாகக் கொண்டோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கொளம் அடைத்துத் திருத்தி பயிர் செய்து கூடிய நிலங்களை கொளத்தைத் தானமாக அனுப வித்துக் கொள்ளவும்... காலிங்கராயன் எழுத்து ஆண்டு 14 நாள் 250.