பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

123) கொண்டு குடியேற்றி அனுபவிக்கவும் இவை காலிங்க ராயன் எழுத்து. கொடுமுடி அம்மன் சந்நிதி கருவறைக் கல்வெட்டு ...... திருப்பாண்டிக்கொடுமுடியாளுடைய நாய நார்க்கு தேவஸ்தானம் விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் வெள்ளைக்குளம் வரகுணன் நெறையுங்காலம் ஒடைவு குலைவுப்பட்டு இப்பறம் கெடக்கையில் அடைத்து நீர்நிலம் பயிர்செய்யும் அளவில் பண்ணிரண்டு அடிக்கோலால் அயினூறு குழி கொண்டது ஒரு மாவாக திருப்பாண்டிக் கொடுமுடியில் பல நாயனார்க்கு விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் நாயனார்க்கு முற்றூட்டு கையில் நெலம் இருபது மாவும் திருப்பாண்டிக் கொடுமுடியாருக்கு விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் நாயனார்க்கு இவை இறையி லிக்குட்பட்ட நிலம் நாலு மாவும் மேல்கரை அரைய நாட்டாருக்கும் நகரத்தாருக்கும் இறையிலி நீக்கி இவ்வூர் குடிநீங்காத் தேவதானமாக திருப்பாண்டிக் கொடிமுடி யாருக்கும் விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் உடையார்க் கும் இறையிலி தேவஸ்தானமாகக் குடுத்தது யாண்டு ஆறாவது நாள் முப்பத்தாறாவது இவை சுந்தரபாண்டியக் காலிங்கராயன் எழுத்து. வெஞ்சமாங்கூடலூர்க் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸ்ரீ குல சேகர தேவர்க்கு யாண்டு நாலாவது வைய்யாசி மீ 25 தேதி ஆளுடையார் திருவெஞ்சமாங் கூடலூர் ஆளுடைய நாயனார்க்கு கோயில் ஆதி சண்டேசுவர தேவர்களுக்கு கோயில் கணக்கு ஸ்ரீ காரியஞ் செய்வார்க்கு விலைப் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது தட்டையூர் நாட்டு நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த நத்தம் பூத்துரை செல்லவான கண்ணப்ப நல்லூருக்கு