பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 களிலும் திருமகள் விளையாடுகின்றாள். நால்வேதங்களை யும் ஐந்து காப்பியங்களையும் பதினெண் புராணங்களையும் மக்கள் விரும்பிப் பயிலுகின் றனர். அந்நாட்டில் பாடப் படுகின்ற பழக்குலைப் பசும்பாட்டுக்கள் செவியில் அமுதைப் பாய்ச்சுகின்றன. இச்செயல்கள் நடப்பதெல்லாம் எந்த நாட்டில்? பூந்துறை நாட்டில் தான் என்று கூறுகின்றார் ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நாடக நூலாசிரியர். “காடெல் லாம்சிறு செந்நெல் விளையும் கதிரவன் வந்து கமலங்கள் சேரும் நாடெல் லாம்வெண் தரளம் கொழிக்கும் நல்ல அல்லியில் வெண்மதி சேரும் வீடெல் லாம் திரு மின்விளை யாடும் வேத காவிய புராணங்கள் ஒதும் பாடல் லாம்பைந் தமிழதை ஆக்கும் மன்னு பூந்துறை நாடெங்கள் நாடே" என்பது அப்பாடலாகும். இன்னும் பூந்துறை நாட்டின் பொன்றா வளத்தைப் பற்றிக் கிழான்பாடி பாம்பண்ண கவுண்டன் குறவஞ்சி, பூந்துறைப் புராணம், சென்னிமலைப் புராணம், நல்லண்ணன் காதல் போன்ற இலக்கியங்களும் பல தனிப்பாடல்களும் புகழ்கின்றன. காலிங்கராயனாம் சிறப்புடைச் செம்மலைப் பெற்ற தால் பெரும்புகழ் பெற்ற வெள்ளாடு இப்பூந்துறை நாட்டில் உள்ள ஊர்கள் முப்பத்திரெண்டனுள் ஒன்று. இதுவே பூந்துறை நாட்டின் இரண்டாவது தலை நகர மாகவும் காலிங்கராயன் வீற்றிருந்த கோ நகரமாகவும் விளங்கிய சிறப்பினை உடையது. காலிங்கராயனைப் 'பூந்துறை நாட்டுக்கு நாட்டான்' என்று குறிப்பிடும் ‘வமிசாவளி' அவனை 'வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரன்' என்றும் பல இடங்களில் குறிக்கின்றது. பூந்துறை நாட்டுச் சபை இவ்வூரில் பலமுறை கூடியதாகக் கல்வெட்டு மூலமாக அறிகின்றோம்.