பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

127 நல்லது என்று சம்மதிச்சு அந்த வெள்ளவேட்டுவன் இருக்கும் வெள்ளோட்டுக்கு ஒருரவு கொண்டு போயி அவன் ஊடை யத்தையும் தகர்த்து ஊரையும் கொள்ளைப்பண்ணி சிறிது ராணுவங்களையும் வெட்டி அவன் தலையும் வெட்டிக் கொண்டு வந்து எல்லோரும் காணத்தக்கதாயி வய்த்தபடி யினாலே நாங்களிருபத்து நாலு நாட்டாருங்கூடிச் செட்டி வர்த்தகங்கள் பலபட்டரைச் சாதிகளையும் வரவழைத்து நம்ம சனங்கள் மேற்கு நல்லூருக்கா நாடு ஆனைமலைநாடு காவிலுக்கா நாடு வாரக்க நாடு ஆருநாடு குருப்புநாடு ஒடுவங்க நாடு யிந்த ஏழு நாட்டுலெயும் சீவார்த்தனஞ் செய்ய வேண்டிய நிமுத்தியமாக பரந்து போயிருக்கும் சனங்கள் அந்தந்தச் சாதிகளுக்குண்டான வரமுறைமை தாய் தகப்பனுக்கு அமுதுபடையாதவன் புருசன் பெண்சாதியை முடுக்கிவிட்டவன் பெண்சாதியானவள் புருஷன் வார்த்தைக்கு ஏறுமாறாகப் பேசினவள் ஒருத்தருக் கொருத்தர் மித்துருபேதம் செய்கிற பேர்கள் இப்படி நாலு விதமாயி முறைமை தப்பி நடவாமல் தரும் நீதமாய் நடக்கும்படிக்கு இருபத்திநாலு நாட்டாருங்கூடி செட்டி வர்த்தகர்களும் பலபட்டரைச் சாதிகளும் சம்மதிச்சு காளியணனுக்கு சாதிப்பட்டயம் நேமுகம் செய்து கொடுக்க வேணுமென சகலமான செனங்களும் அனைவருங்கூடி யீரோட்டுக் கொங்கிலியம்மன் சன்னதிக்குப் போயி அம்மனுக்குப் பதினாயிரம் பழம் நெய்வேதினஞ் செய்து பின்பு காளியணனுக்குச் சாதிப் பட்டயங் குடுத்தபோது பொங்கலூரு நாட்டு தெய்வசிகாமணி வந்து இந்தப் பட்டயம் எனக்குச் சேர வேணுமென்று மரித்துச் சொன்னான் நல்லதுயென்று தாராபுரம் பிரமியணன் சொல்லும் வசனம்--உங்கள் ரெண்டு பேர் படிக்குத் திருவுளச் சீட்டெழுதி அம்மன் பாதத்திலே வய்த்து ரெண்டு பேரையும் பார்த்துச் சுனையிலே ஸ்னாநஞ் செய்து அம்மனைப் பிரதட்சினை வலமாயிவந்து தெய்வசிகாமணி நான் முன்னமே எடுப்பேனென்று சமத்துச் சொன்னான்