பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காணிப்பாடலும் பூந்துறைப் புராணமும் சென்னிமலை மாண்டவர் பிள்ளைத் தமிழும் வெள்ளோட்டை நகரம் என்றே குறிக்கின்றன. * நற்கா விரிக்குமேல் கரைதனில் பூந்துறைசை நளிர்கொண்ட வெள்ளோடையூர் நசையனூர் எழுமாதை எனுமுயர் புகழ்பெரிய நகரமொடு நான்கதாக' என்பது சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழில் வரும் சிறுதேர்ப் பருவப் பாடல்பகுதியாகும். காலிங்கராயன் காலத்திற்குப் பின்னர் இவ்வூர் காலிங்கராய வெள்ளோடு என்று குறிப்பிடப் பெறுவதால் காலிங்கராயனால் இவ்வூர் பெற்ற பெருமையை நன்கறியலாம். கொங்கு நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்ற சிறந்த அறச்செயல்களில் வெள்ளோட்டில் வாழ்ந்த பெருமக்கள் சாட்சிக் கையொப்பமிட்டிருப்பதைச் சாசனங்கள் வாயிலாகவும், பட்டயங்கள் வாயிலாகவும் அறிகின்றோம். 32 ஊர்களில் வெள்ளோடு ஒன்று ‘பூந்துறை வெள்ளோடு நசியனூர் எழுமாதை புகழ்சேர் பிடாரிநகரம் பூங்கமழும் ஈங்கியூர் பெருந்துறை சாத்தனூர் பொன்காள மங்கலம் அதும் ஆய்ந்த தமிழ்கூறும் குழாநிலை கிழாம்பாடி ஆண்மைகொள் முடக்குறிச்சி அனுமநகர் பழமங்கை குலவிளக் குக்காகம் அறச்சலூர் விளக்கேத்தியும் வேந்தர்மகிழ் ஈஞ்சநகர் சத்திமங் கலமதும் மிக்கசே மூர்மங்கலம் வீரநகர் ஈரோடு பேரோடு சித்தோடு மிக்கான திண்டல்புதூர்