பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

135) அது நிவாரணம் இல்லாமல் இருக்கிறபடியினாலே என்னுடைய சன்னிதானத்திலே இருக்கப்பட்ட விபூதியைக் கையிலே கொண்டுபோய் அந்தச் சித்தப் பிரமையாய் இருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்தப் பிரமை தீர்ந்து ராச குமாரனாக அரண்மனை போய்ச் சேர்ந்துயிருப்பான். ராயரவர்கள் உன்பேரிலே சந்தோஷமாய் உன் மனோ பீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பன மாச்சுது. அந்தச் சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரெண்டு நாள் பட்டினி இருக்கப்பட்டவன் விபூதி யெடுத்துக்கொண்டு பெனுகொண்டா பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பார்த்துக்கொண்டு வருகுற சமயத்தில் ராசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிரமை பிடிச்சு தன்னப்போலே திரிகிற குறிப்பைக் கண்டு பிடிச்சு ராசகுமாரன் பேரிலே காளியை நினைச்சு விபூதி பேட்டான். அந்த விபூதி தூளி ராசகுமாரன் பேரிலே விழுந்தவுடனே சித்தபிரமை தெளிஞ்சவனாய் ராஜ சின்னங்களுடனே அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். அக்காலத்து நரபதி சிம்ஹஸ்னாதிபதியான பெனு கொண்டை விசய நகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்குச் சித்தப் பிரமை விடுதலை பண்ணின வனைத் தருவிக்கக் சொல்லி மந்திரி பிரதானி களுக்கு உத்தரவு செய்தபடியினாலே அந்த சமயத்தில் தரிவிச்சு ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத் தினாலே காலிங்கக் கவுண்டனைப் பார்த்து உன் சென்மப் பூமி முதலான விருத்தாந்தங்கள் என்னவென்று கேள்கு மிடத்தில் பவானி கூடல் சமீபத்தில் உண்டுபண்ணின அணை - வாய்க்கால் முதலான சங்கதிகளும் தெய்வ கடாட்சத்துனாலே காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் வழங்கப்பட்ட வரலாறும் கொங்கு இருபத்து நாலு நாட்டுலே பட்டக்காரர்களாய் சமானிடை...சி மரியாதிகள் தாள்வு நடக்கப்பட்டு சமுஸ்தானத்திலே காத்துக்கொண் டிருந்து காளிகாதேவி அனுக்கிரகமம் பண்ணின நாள்