பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

137 மனசபுதாரனாக ஆண்டு அனுபவிச்சுக்கொண்டு வரவேணு மென்று பட்டாபிஷகம் செய்து பட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமரகாரை நேமுகம் செய்து இரட்டை வாள் பச்ச ஈட்டி, கரீட்டி, வெள்ளி ஈட்டி, தங்கக் கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீறு மாறுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள். பாளையக்காரன் முன்னாலே நாடூர் பாளைப்பட்டு பட்டக்காரர்கள் சரிசமமான மரியாதை கொடுக்கிறது இல்லை என்று சொன்ன மனவெறுப்புனாலே ராய சமஸ்தானத்திலே காத்து இருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிருதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக் காரராக காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவனாய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனை மலைச் சரிவிலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குளிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊரு கட்டிவிச்ச படியினாலே ஊற்றுக்குழி என்று கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள். ராயர் சமஸ்தானத் திலே காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பிரசித்திப் பட்டு பாளையப்பட்டு உண்டான நாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1702 வரைக்கும் 582 பட்டங்களுடைய வரிசைகளும் அவாளவாளுடைய சரிதை களும் இதன் கீழே எழுதி வருகிறது. பரம்பரை வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் சாலிங்கராயன் என்கிற பேர்