பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

143 துக்குச் சேர்ந்த கொடகர் சமஸ்தானத்துக்கு யெதுத்துயிருக் கிற றகளையென்று யென் வம்சத்தார்களில் சனசேகரத் துடனே குடகு போகச் சொல்லி உத்தரவு ஆனபடியினாலே சனசேகரத்துடனே கொடகு ராஜாவின் பேரிலே போய் யுத்தம் செய்து ஜெயிச்சு வந்தார்கள். அப்போ மைசூர் சமஸ்தான கர்த்தாக்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு அஷ்ட கோண தண்டிகைக்கு தங்க முலாம் பூசியெட்டு கலசத்துடனே தண்டிகையுங் கொடுத்து ஆடையாபரணங்களும் கொடுத்து ஊற்றுக்குழி பாளையப் பட்டுக்கு அக்காலத்து சேர்ந்து இருந்த கிராமங்கள் ஒன்பதுக் கும் வருஷம் ஒண்ணுக்கு ராசகோபாலி 756 நிகுதி செய்து உத்தரவு செய்தார்கள். அந்த நாள் முதல் என் சகோதர ரான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் அகத்தூர் காலிங்க ராயக் கவுண்டர் பட்டம் ஆண்டு கொண்டு வந்த நாள் வரைக்கும் மைசூர் சமஸ்தானத்தார் கட்டளையிட்ட நிகுதிப் படிக்கு அரமணைக்கு நடந்து கொண்டு ஊற்றுக்குழி பாளையக்காரர் என்கிறவாளாய் பட்டம் ஆண்டு கொண்டு வந்தார்கள். பூர்வம் முதலாக என் வமுசத்திலுள்ள பாளையப்பட்டு ஆண்டு கொண்டு வரப்பட்டவர்கள் செவுறிய வுதார கெம்பீர குணாதிசயங்கள் உள்ளவர்களாய் இருந்து மற்ற பாளையக்காரர்களிலே அந்தந்த காலத்திலே அரமனைக்கு நிராகரிச்சுயிருக்கப் பட்டவர்களையும் தமக்கு யெதிரியா யிருக்கப்பட்டவர்களையும் மடக்கிக் கொண்டு ஊத்துக்குளி யிலே கோட்டையும் பந்தோபஸ்தும் பண்ணிக்கொண்டு கால் தளம் அய்யாயிரம் நூறு குதிரை ஆயுதங்கள் வச்சு இருக்கப்பட்ட சனம் அய்யாயிரம் ஒரு கடகம் யானை இதுகளுடனே ஆனைமலை கானல்களிலே ஆனைகள் பிடிச்சு அரண்மனைக்குக் கொடுத்துக் கொண்டு அரமனையார் கட்டளையிட்டபடி நடந்து கொண்டு அரமனையார் கட்டளையிட்ட ஆனைமலை மாச்ச நாயக்கன் பாளையம் பாதிகாவலும் முன்னாள்