பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேர்ந்துமழை பெய்திடும் இலவமலை திருவாச்சி திகழ்பனசை ஓடாநிலை தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர் சிறந்தபூந் துறைசைநாடே' இவ்விசைநலன் கனிந்த பாட்டு பூந்துறை நாட்டின் கண்ணமைந்த ஒப்பில்லாத முப்பத்திரண்டு ஊர்ப்பெயர் களையும் எடுத்துரைக்கின்றது. வெள்ளோட்டின் பெயர்க்காரணம் கொங்கு நாட்டின் பழமையான ஊர்களுக்கெல்லாம் எவையேனும் காரணங்கள் கருதியே பெயர்கள் வைக்கப் பட்டன. பிற்காலத்தில் அவ்வூர்களின் பெயர்கள் மாறிப் பல்வேறு வடிவங்களை அடைந்தன. அவற்றின் உண்மைக் காரணங்கள் தெரியாமல் மறைந்தன. குளிர் தண்டலைகுளித்தலை ஆனதும், பொழில் வாய்ச்சி- பொள்ளாச்சி ஆனதும் இராசராசபுரம் தாராபுரம் ஆனதும் இதற்கு நல்ல சான்றுகளாகும். வெள்ளோடு என்னும் சிற்றூர் ஈரோட்டின் தென் மேற்கில் ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் வழியில் 14 கிலோ மீட்டரில் உள்ள ஊராகும். இவ்வூரில் பல செந்தமிழ்ப் புலவர்களும் அரசியல் தலைவர்களும் வள்ளல் களும் தோன்றி வாழ்ந்து ஊருக்குச் சிறப்புண்டாக்கினர். நமது தலைவன் காலிங்கராயன் பிறந்து வளர்ந்ததும் இவ்வூரில் அருகில் விளங்கும் கனகபுரத்தில் தான். புராணக் கதைகளோடு இணைத்து இவ்வூரின் பெயருக்குப் பல காரணங்கள் கூறுவர். காளியண்ணப் புலவர் மிகச் சுவை யான முறையில் வெள்ளோட்டின் பெயர்க்காரணத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். “தேவர்கள் அனைவரும் கொங்கு மண்டலத்தில் பூந்துறை நாடு புகுந்து இறைவனை வணங்க ஏற்ற இடம் எது என்று ஆராய்ந்தனர். அவர்கட்கு முன்னே திருமாலு