பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 டைய யானை வழிபட இடந்தேடிச் சென்றது. அந்த யானை வெள்ளோடு இருக்குமிடம் வந்தவுடன் நின்றது. தேவர்கள், இறைவனை வணங்கத் தகுந்த இடம் கண்டோம் என்று ஆரவாரித்தனர். நால்வேதங்கள் முழங்க அங்குச் சர்வ லிங்க நாயகராய் இறைவன் இருக்கக் கண்டனர். அந்த யானை தன்னுடைய தந்தங்களாலும் கால்களாலும் நிலத்தைத் தோண்ட அங்கு வெண்மணல் இருக்கவும் பால் நிறம் போன்ற ஓடை ஒன்றிருப்பதைக் கண்டனர். அதனைத் தீர்த்தமாக வைத்துத் தேவர்கள் இறைவனை வழிபட்டேகினர். அவ்வோடைக் கு வெள்ளோடை என்று பெயர் ஏற்பட்டது. பின்னர் அப் பெயர் வெள்ளோடு என்று மாறிற்று. “மேல்பாலில் வாசவன் தன் கரியொன் றேகி விளங்கும தம் பொழிந்து நிழல் சுழித்து விம்மிக் காலாலும் கோட்டாலும் நிலத்தைக் கீண்ட கண்டது நீர் வெள்ளோடை கமழ்பால் ஓடை” என்பது அப்பாடல் பகுதியாகும். கோயில்கள் வெள்ளோட்டின் பெருமையையும் வரலாற்றுப் பழமை யையும் எடுத்துக் காட்டுவதற்கு இன்றும் அங்குள்ள கோயில்களே சிறந்த சான்றுகளாக அமைகின்றன. வெள்ளோட்டின் வடக்கே வயல்களிடையில் பாழ டைந்த சிறுகோயில் ஒன்றுள்ளது. அது சமண சமயத்தைச் சேர்ந்த ஆதிநாதர் கோயிலாகும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையில் கொங்கு நாட்டில் ஈரோடு வட்டாரத்தின் பல இடங்களில் (விசயமங்கலம், திங்களூர், சீனாபுரம், வெள்ளோடு, பூந்துறை) சமண சமயத் தவர் வாழ்ந்தனர். இவ்வூர்களிலெல்லாம் சமண சமய ஆலயங்கள் இன்றும் இருக்கின்றன.