பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 இங்குள்ள சிவாலயத்தில் வீற்றிருந்தருள் புரிபவர் சர்வலிங்கேசுவரன் அம்மன்-பாடகவல்லி அம்மன். காலிங்கராயனுடைய வழிபடு கடவுள் இந்த ஈசுவரனே! இங்குள்ள பெருமாளுக்கு ஆதிநாராயணப் பெருமாள் என்பது திருநாமம். பிற கோயில்கள் நஞ்சுண்ட ஈசுவரன் கோயில், சுப்பிரமணியர் கோயில், அண்ணன்மார் கோயில், இராசாக் கோயில், பொன்காளி அம்மன் கோயில், அயத்தாள் அம்மன் கோயில், ஆயி அம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் இவை களாகும். கல்வெட்டுக்கள் இவ்வூரில் சர்வலிங்கேசுவரன் ஆலயம், இராசாக் கோயில், பொன்காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், அண்ணன்மார் கோயில் ஆகிய கோயில்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வூர்க் கல்வெட்டுக் களில் சருவலிங்கர் கோயில் கல்வெட்டுக்களைச் சாசன இலாகாவினர் படி எடுத்துள்ளனர். இக்கோயிலில் மட்டும் ஒன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. வீரபாண்டியன் காலக் கல்வெட்டுக்கள் மூன்றும் விசய நகர அரசர் காலக் கல்வெட்டுக்கள் நான்கும் காலம் குறிப்பிடப்பெறாமல் உள்ள பாடல் சாசனங்கள் இரண்டும் இருக்கின்றன. இலக்கியங்கள் இவ்வூரைப்பற்றி உள்ள தனிப்பாடல்களேயன்றிக் காணிப்பாடல்களும் ஊர்த்தொகைப் பாடலும் இவ்வூரின் புகழ்பாடும். கொன்றை வேந்தன் வெண்பா இவ்வூரைப் பற்றியதே! இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள பாடகவல்லியம்மன்மீது பிள்ளைத்தமிழ் ஒன்றுண்டு. சிவா லயக் கல்வெட்டிலிருந்து 'அழைப்பிச்சான் பாட்டுக் கலம்பகம்' என்ற நூலொன்று இருந்ததாக அறிகின்றோம்.