பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பட்டமும் பதவியும் இளமைக் காலம் காலிங்கராயனின் இயற்பெயரைப்பற்றியும் இளமைப் பருவத்தைப்பற்றியும் விரிவாக அறியக் குறிப்புக்கள் எவை யும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. 'இந்தியாவின் ஆளும் தலைவர்களும் பெருமக்களும் நிலக்கிழார்களும்' என்னும் ஆங்கில வரலாற்று நூல் அவரைச் 'சாத்தந்தை காலிங்கராயர்' என்று குறிப்பிடுகிறது. 'சாத்தந்தை, என்ற குலப்பெயருடன் அவர் பெயர் இணைந்து வழங்கப் பெற்றமை தெரிகிறது. அண்மையில் கிடைத்த ஓலைப் பட்டயம் ஒன்றின் மூலம் காலிங்கராயனின் தந்தை பெயர் நஞ்சயன் என்றும் காலிங்கராயனின் இயற்பெயர் லிங்கய்யன் என்றும் தெரிகிறது. "தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் ஜீரணோத் தாரணம் பண்ணிக்கொண்டு இருந்தான்” என்று 'வமிசாவளி' கூறுவதால் சிறந்த சிவபக்தன் என்றும் வெள்ளோடு சர்வலிங்கேசுவரரை வழிபடு தெய்வமாக வழிபட்டு வந்தார் என்றும் தனியாகக் கோயில் திருப்பணி செய்யும் அளவிற்கு மிகுந்த செல்வமுடையவர் என்றும் அறிகின்றோம். வைணவக் கோயில்கள் பலவற்றிற்கும் அவர் திருப்பணி செய்திருப்பதால் சமரச நோக்குடையவர் என்பதனையும் அறிகின்றோம். வமிசாவளிமூலம் காலிங்க ராயனுக்கு ஒரு மகன் இருந்ததாகவும் பண்ணை குலத் தினரை மாமன் முறையாகக் கொண்டு வாழ்ந்தவர் என்றும் அறிகிறோம். மாமன் வீடு கொடுமுடிப் பகுதியில் இருந்த தாகக் கூறுவர்.