பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 முகம் வெள்ளோட்டுக்குரியவர் என்றும் அண்மையில் கிடைத்த பட்டயத்தாலும் சில கல்வெட்டுக்களாலும் உறுதிப்படுகிறது. காலிங்கராயன் அணை கட்டின பட்டயத்தில் 'கனக புரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணை கட்ட வேணு மென்று' என்ற தொடர் வருகிறது. கனகபுரம் விநாயகர் கோயிலில் காலிங்கராயன் வங்கிஷத் தில் காசிலிங்கக் கவுண்டன் உபயம்' என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. கவுண்டச்சி பாளையம் பாலமடை அம்மன் கோயிலை 1850ஆம் ஆண்டுத் திருப்பணி செய்த கனகபுரம் கொளந்தவேல் கவுண்டர் தம்மைக்காலிங்கராயன் வம்மிஷம் என்றும் தாம் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் அக் கோயில் கல்வெட்டில் குறித்துக் கொள்ளுகின்றார். கனகபுரம் கரையைச் சேர்ந்த செம்மாண்டம் பாளையத்தில் காலிங்கராயர்க்கு நிலங்கள் இருந்ததாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது. எனவே காலிங்கராயர் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுகிறது. அரசியல் தலைவன் ஆதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கொங்கு நாட்டைச் சடையவர்மன் வீரபாண்டியன் என்பவன் கைப்பற்றினான். "கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்துக் கங்கை இருகரையும் காவிரியும் கைக்கொண்டு” எனவரும் அப்பாண்டியன் மெய்க்கீர்த்திப் பகுதி இச் செய்தியை வலியுறுத்தும். வெற்றி பெற்ற பாண்டியன் படையில் வெள்ளோட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன் சேர்ந்து மதுரை சென்றான். விரைவில் தன் அறிவு ஆற்றலால் பாண்டியன் படைக்குத் தலைமை பூண்டான். வீரபாண்டியனுக்கு அறிவுரை கூறும் தலைமை அமைச்சனாக